Saturday 25 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

சீனாவின் ஊதுகுழல்...
இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டால் சரி..
காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்த போது, பாக்., பிரதமர் இம்ரான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தன்னை காஷ்மீர் மக்களின் தூதர் என்றும் கூறிக்கொண்டார். அதேபோல் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தியதால், இங்குள்ள முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாக கருத்து தெரிவித்து வந்தார். இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மீது அக்கறை இருப்பது போலவும், அவர்களுக்காக குரல் கொடுப்பது போலவும் பாசாங்கு செய்து வந்தார். இதற்கிடையே
சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் துன்புறுத்தப்படுவதற்கு உலகம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இது தொடர்பாக இம்ரானிடம் கேள்வி எழுப்பப்பட்டது.அவர் கூறியதாவது: சீனாவில் முஸ்லீம்களுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி எனக்கு அதிகம் தெரியாது. அது பற்றி எப்போதோ படித்துள்ளேன். சீனா, பாகிஸ்தானின் நல்ல நண்பன். எங்களது கடினமான சூழ்நிலைகளில் சீனா எங்களுக்கு உதவியுள்ளது. சீனாவுடன் எங்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும் தனிப்பட்ட முறையில் தீர்த்துக்கொள்வோம்; பொதுவெளியில் சொல்ல மாட்டோம். இவ்வாறு இம்ரான் கூறியுள்ளார்.
குறிப்பு;இப்படி ஒரு செய்தியை சொல்ல ஒரு பிரதமர் வெட்கப்பட வேண்டாமா?சீனாவில் இஸ்லாமியர்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாது,இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு நடப்பது மட்டும் தெரியும்?காரணம்..?சீனா உதவி(பணம்) செய்கிறது.உனக்கு பண உதவி செய்தால் இஸ்லாமியர்களை என்ன வேண்டும் என்றாலும் செய்துக் கொள்ளலாம்?இஸ்லாமியர்கள் புரிந்து கொண்டால் சரி..
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment