Wednesday 22 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இதுக்குத்தான் ஜே.என்.யூ மாணவர்கள் போராடினார்களா?
சமீபத்தில் மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சில கல்லூரி,பல்கழைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினாலும் டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் அதிதீவிரமாக போராடினார்கள்.
ஒரு சில நாட்களில் இந்தியாவின் மற்ற கல்லூரிகளில் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்த நிலையில் வாரக்கணக்கில் ஜே.என்.யூ மாணவர்கள் மட்டும் போராடி வந்தனர் இந்த நிலையில் ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மட்டும் எதற்காக இவ்வளவு தீவிரமாக போராடி வருகின்றனர் என்பதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.
டெல்லியில் உள்ள ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்பட்டுள்ள கேள்விக்கு வந்துள்ள பதிலில் 301 வெளிநாட்டு மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் படித்து வருவதாகவும் அவர்கள், கொரியா, நேபாளம், சீனா, ஆப்கானிஸ்தான், ஜப்பான், ஜெர்மனி, அமெரிக்கா, சிரியா, பங்களாதேஷ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது ஆனால் இதில் 82 மாணவர்கள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பது குறித்த எந்த ஆவணங்களும் இல்லை என்று பல்கலைக்கழக நிர்வாகம் கூறியிருப்பது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த மாணவர்கள் குடியுரிமை திருத்த சட்டத்தால் வெளியேற்றப் பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் தான் இந்த பல்கலைக்கழக மாணவர்கள் இந்த அளவுக்கு தீவிரமாக போராட்டம் நடத்தியதாக கூறப்படுகிறது.

குறிப்பு;எந்த நாடு என்ற ஆதாரம் கூட இல்லாமல் இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்கலைக்கழகத்தில் எப்படி சேர்த்தார்கள்?வெளிநாட்டினர் எந்த ஆதாரமும் இல்லாமல் வருடக்கணக்காக நமது நாட்டில் தங்கி படிக்கின்ற அளவுக்குத்தான் இதுவரை நமது சட்டங்கள் இருந்துள்ளது என்பது வெட்கப்படவேண்டிய செய்தி..
தலைநகரிலேயே இப்படி என்றால்..?தஞ்சை போன்ற சிறிய ஊரில் உள்ள சாஸ்திர பல்கலைக்கழகத்தில் கூட ஏராளமான வெளிநாட்டினர் தங்கிபடிக்கின்றனரே?இது போல் இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழங்களில் எத்தனை மாணவர்களோ..?சாரி தீவிரவாதிகளோ?கனிமொழியும்,உதயநிதியும் டெல்லி சென்று சந்தித்தது இவர்களைத்தானோ..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment