Saturday 18 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

’உருவம் சிறியது என்றாலும்’’..
..............................
தாழும்பூவின் மடல் பெரியதாக இருந்தாலும் வாசம் அதிகம் தருவதில்லை.. ஆனால் அதனின் சிறிய மகிழம்பூவோ நல்ல நறுமணத்தைத் தருகிறது..
கடலின் நீர் துணி துவைக்கக் கூட உதவுதில்லை..
ஆனால் கடலின் அருகில் தோன்றும் சிறு ஊற்று குடிப்பதற்கும் நல்ல நீரைத் தருகிறது.
எனவே எதையும் அதன் உருவத்தை வைத்து எடை போடக்கூடாது..
தையற்காரர் ஒருவர், தனது கடையில் துணிகள் தைத்து கொண்டு இருந்தார். அவருடைய மகன் அருகில் இருந்து, அவர் வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
தையற்காரர் ஒரு புதுத் துணியை எடுத்தார்.
அதை அழகிய பளபளக்கும் கத்திரிக்கோலால் துண்டுகளாக வெட்டினார்.
பின்னர் கத்திரிக்கோலை கால் அருகே போட்டு விட்டு துணியைத் தைக்கலானார்.
துணியைத் தைத்து முடிந்ததும் சிறிய ஊசியை எடுத்துத் தனது தலையில் இருந்த தொப்பியில் குத்திப் பத்திரப் படுத்தினார்.
இதைப் பார்த்துக் கொண்டு இருந்த மகன் அவரிடம்,
“அப்பா ! கத்திரிகோல் விலை உயர்ந்தது, அழகானது. அதை அலட்சியமாகக் காலடியில் போடுகிறீர்கள். ஊசி சிறியது மலிவானது.
ஆனால், அதை தலையில் பாதுகாக்கிறீர்களே. அது ஏன்?” என்று கேட்டான்.
நீ சொல்வது உண்மை தான். கத்திரிக்கோல் அழகாகவும், மதிப்பு உள்ளதாக இருந்தாலும், அதன் செயல் வெட்டுவது. அதாவது பிரிப்பது!
ஆனால், ஊசி சிறியதாகவும், மலிவானதாகவும் இருந்தாலும் அதன் செயல் சேர்ப்பது.
ஒருவருடைய மதிப்பு அவரின் செயலைக் கொண்டே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் உருவத்தை வைத்து அல்ல “ என்றார்.
ஆம்.,நண்பர்களே..
மிளகு என்பது கடுகை விட பெரியது என்றாலும் அதன் காரம் அதிகம்... கடுகு உருவில் சிறியதாக இருந்தாலும் மிளகிற்கு இணையான காரம் கடுகில் உண்டு.
அதைப் போலத்தான்.,
ஒரு மனிதனின் உடையைப் பார்த்தோ, உருவத்தைப் பார்த்தோ எடை போடக் கூடாது..
அவரின் செயலை வைத்தே அவரை மதிப்பீடு செய்ய வேண்டும்..
( உடுமலை. சு.தண்டபாணி).

No comments:

Post a Comment