Monday 27 January 2020

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இவர்களா மதவாதிகள்..?
பத்மஸ்ரீ விருது பெறுபவர்களில் ஒருவரான முகமது ஷெரிப் (80), உ.பி.,யில் பல ஆதரவற்ற உடல்களுக்கு இறுதிச்சடங்கு செய்துள்ளார். இவரின் சேவையை அறிந்த மாநில அரசு, பத்ம விருதுகளுக்கு பரிந்துரை செய்துள்ளது அதன்படி மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது.
யார் இந்த முகமது ஷெரிப்?
உ.பி., மாநிலம் அயோத்தியில் சைக்கிள் பழுதுபார்க்கும் கடை வைத்திருந்தார். 27 ஆண்டுகளாக ஆதரவற்று இறப்பவர்களை ஜாதிமத பேதமின்றி தனது சொந்த செலவில் இறுதி சடங்கு செய்து வந்துள்ளார்.
இது குறித்து ஷெரிப் அவர்கள் கூறியதாவது: 1993ம் ஆண்டில் சுல்தான்பூரில் வேலைக்கு சென்ற என் மகன் கொலை செய்யப்பட்டான். ஆதரவற்றவர் என கருதி போலீசார் அடக்கம் செய்தனர். ஆனால் அதுப்பற்றி எனக்கு ஒரு மாதம் கழித்து தான் தெரியவந்தது.
அப்போது தான் ஆதரவற்றவர்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். இதுவரை 3000 ஹிந்து மற்றும் 2500 முஸ்லிம் ஆதரவற்றவர்களின் இறுதிச்சடங்கு செய்து அடக்கம் செய்துள்ளேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
குறிப்பு;இஸ்லாமியரான முகமது ஷெரீப் மதங்களை கடந்து மனித நேயத்தோடு செயல்படுகிறார்..இதை அறிந்த உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத் மத்திய அரசிடம் இவரது பெயரை பத்ம ஸ்ரீ விருதுக்கு பரிந்துரை செய்கிறார்,மத்திய அரசும் இவருக்கு பத்ம ஸ்ரீ விருது கொடுக்கிறது.
இவர்களா மதவாதிகள்..?இதுவா மதவாத கட்சி..?இஸ்லாமியர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்..சீக்கியம்,புத்தம்,சமணம்,கிருஸ்தவ மதங்களை ஆதரிக்கும் பெரும்பான்மையான இந்து மக்களும்,பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்று ஆட்சி செய்யும் அரசும் நம்மை விட்டு விலகுவது ஏன் என சிந்தித்துப் பார்த்து சீர்செய்து கொள்ள வேண்டும்..முகமது ஷெரீப் போன்ற எத்தனையோ நல்ல இஸ்லாமியர்கள் உள்ளனர்..அவர்கள் தன் சமுதாயத்தில் தவறான வழிக்கு செல்லும் சில இளைஞர்களை கண்டிக்க வேண்டும்,அல்லது தனிமைப்படுத்த வேண்டும்..
பெரும்பான்மையான இந்துக்கள் மதம் பார்ப்பதில்லை.மதங்களை கடந்து நல்லவர்களை ஆதரிக்க, வரவேற்க என்றும் இந்துக்கள் தயங்கியதும் இல்லை.
மதத்தை விட மனிதத்தின் பக்கம் நிற்பவர்கள் இந்துக்கள்..இல்லை என்றால் இத்தனை மதங்கள் எப்படி இந்தியாவில் தோன்றி இருக்க முடியும்..?ஆயிரகணக்கான ஆண்டுகளாக இவ்வளவு மதத்தினரும் எப்படி ஒற்றுமையாக இந்த மண்ணில் இருந்து இருக்க முடியும்? மாற்று மதங்கள் இந்த மண்ணில் வளர்ந்து இருக்க முடியும்?இவர்களா மதவாதிகள்?

No comments:

Post a Comment