Thursday 23 January 2020

முகநூல் தகவல் (மனித்தேனீ)

நெத்தியடி......
#484பதிவு - 269 தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம் தமிழில் நடத்த வேண்டுமாம் ...🤔
சமீப காலமாக தமிழ் பற்றாளர்கள் ஆன்மிகம் பொங்கி😀 ஆகமகோயில்கள் பக்கம் திரும்பி ஆக்கிரமிப்பு செய்ய துவங்கி உள்ளனர் ..😠 காரணம் மதப்பற்று இல்லையாம் தமிழ் பற்றாம் ...😀 இவர்கள் சர்ச்களிலும் .மதரஸாக்களிலும் போய் இந்த மொழிப் பற்றை காண்பிக்க இயலுமா ..⛏️ கலாசாரா சீரழிவு ஊடகங்கள் இதனை விவாதித்து குழப்பத்தை உண்டு செய்ய முயற்சிக்கின்றன .. இப்படியாக இந்த கைக்கூலிகள் நமது பாரம்பர்ய கலாசாரத்தை ஒவ்வொன்றாக சிதைக்கும் வேலையில் இறங்கியுள்ளனர் .. இது பற்றிய ஊடக விவாதம் ஒன்றில் கம்யூ.அருணன் பரபரப்பாக விவாதம் செய்வதாக நினைத்து செய்ய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அவர்கள் ஒரே டேக்கில் முறியடித்தது சுவாரஸ்யமாக இருந்தது .. விபரம் கீழே
இது மதம் பிரச்சனை இல்லை மொழி பிரச்சனை என கத்திய அருணனை ஒரே பதிலில் ஆப் செய்த அமைச்சர் ! சபாஷ் நெத்தியடி !
தஞ்சை பெரியகோவில் கும்பாவிஷேகம் விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது, இதற்கென காலம் காலமாக கோவிலில் பின்பற்றப்படும் முறையில் கும்பாபிஷேகம் செய்வதற்கு தமிழக அரசும், கோவில் நிர்வாகமும் தயாராகி வருகிறது இந்நிலையில் திடீர் என எதிர்க்கட்சிகள் தஞ்சை பெரியகோவில் கும்பாவிஷேகம் விழாவை தமிழில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்திவருகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் கும்பாவிஷேகம் விழாவினை தமிழில் நடத்தவேண்டும் எனும் அறிக்கை வெளியிட்டுள்ளார், இதனை பல கட்சிகளும் வலியுறுத்தியுள்ளனர், தற்போது இது குறித்த விவாதம் தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்றது, அப்போது நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மா பா. பாண்டியராஜன் கலந்து கொண்டார், அவரிடம் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருணன் கும்பாவிஷேகம் நிகழ்ச்சியை தமிழில் நடத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு அமைச்சர் இந்துக்கள் பண்டிகைக்கு கூட வாழ்த்து சொல்லாதவர்கள் ஒன்றுகூடி தமிழில் குடமுழக்கு நடத்தவேண்டும் என்று கோரிக்கை வைப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது என பேச திடீர் என ஆவேசம் அடைந்த அருணன் இது மதம் பிரச்சனை அல்ல மொழி பிரச்சனை என கேள்வி எழுப்ப அதற்கு அமைச்சர் கொடுத்த பதிலடியில் வாயை மூடினார் அருணன்.
தற்போது நடைபெறும் அரசு இறைநம்பிக்கை உரிய அரசு என்றும், இதுபோல் சர்ச், மசூதிகளில் தமிழில் வழிபாடு நடத்த இவர்கள் கோரிக்கை வைக்காதது ஏன், நாங்கள் அனைத்து மதத்திற்கும் பொதுவானவர்கள் யாருடைய மதம் நம்பிக்கையிலும் தலையிட மாட்டோம் என்றும் ஊருக்கு இரண்டு மூணு பேர் சொல்வதை விடுத்து கடவுள் நம்பிக்கை உரியவர்கள் சொல்லும் கருத்தைத்தான் நாங்கள் கேட்போம் என நேரடியாக பதிலளித்துவிட்டார்.
தமிழக அரசியல்வாதிகள் தொடர்ந்து இந்து மதத்தினை குறிவைத்து பேசுவதும், அவர்களது விழாக்களை கிண்டல் செய்வதும் அதே நேரத்தில் அவர்களது விழாக்களுக்கு வாழ்த்துக்கள் கூட கூற மனமில்லாத நிலையில் தொடர்ந்து இந்து மதம் விழாக்களை எவ்வாறு நடத்தவேண்டும் என அறிவுரை வழங்குவது விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
இந்துக்களும் தங்கள் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும் என்பதற்கே இந்த பதிவு ..

No comments:

Post a Comment