Monday 10 January 2022

தயக்கமும் தாழ்வு மனப்பான்மையும்.

 தயக்கமும் தாழ்வு மனப்பான்மையும்.

தைரியத்தின் முதல் எதிரி யார் என்றால் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தான். இந்த இரண்டையும் முதலில் ஒரு மனிதன் அடியோடு ஒழித்து விட்டால் கண்டிப்பாக தைரியத்துடன் தான் காணப்படுவான்.
இன்று பூமியில் திறமையானவர்கள் மட்டுமே பெரிய பெரிய பதவிகளில், அரசியல்வாதிகளாக, தொழில் நுட்ப கலைஞர்களாக இருக்கிறார்கள். ஏன் விஞ்ஞானிகளை கூட எடுத்துக் கொள்ளலாம். அவர்கள் தான் திறமையின் மொத்த உருவமே.
இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு விதத்தில் தங்களின் திறமைகளை தங்களின் தகுதியினை தங்களின் ஆற்றலை எப்படியோ ஒரு விதத்தில் மக்கள் உணரும்படி அறிந்திருக்கிறார்கள். எனவே அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டு விட்டனர். வேறு தகுதியானவர்கள் வேறு திறமையானவர்கள் இந்த பூமியில் இல்லையாயென்றால், இருக்கிறார்கள். பிறகு ஏன் அந்த தோராயமான நபர்கள் மட்டும் வெளியே தெரிகிறார்கள் என்றால் மீதம் உள்ள லட்ச கணக்கான திறமைசாலிகளுக்கு போதுமான மனதைரியம் இல்லை.
அதாவது தனது திறமையை பயன்படுத்தி கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் போதிய தைரியம், துணிச்சல் இல்லாமல் அவர்கள் தங்களது வாய்ப்பை கோட்டை விட்டுவிடுகின்றனர். எனவே இந்த கால கட்டத்தில் உண்மையான திறமைசாலி வெளியே தெரியாததற்கு காரணம் என்னவென்றால் போதிய துணிச்சல் இல்லாததே.
எனவே புத்திசாலி இளைஞர்கள் கண்டிப்பாக அந்த தைரியத்தை ஆக்கப் பூர்வமான வழியில் பயன்படுத்தி கண்டிப்பாக வெற்றி அடைவார்கள். தைரியத்தின் முதல் எதிரி யார் என்றால் தயக்கமும், தாழ்வு மனப்பான்மையும் தான். இந்த இரண்டையும் முதலில் ஒரு மனிதன் அடியோடு ஒழித்து விட்டால் கண்டிப்பாக தைரியத்துடன் தான் காணப்படுவான்.
இந்த பரபரப்பான கம்ப்யூட்டர் உலகத்தில் அது எப்படி சாத்தியம் என்றால் தியானம் ஒன்றே தான் வழி. அதாவது தியானத்தின் மூலம் எந்த ஒரு பண்புகளையும், குணநலன்களையும் மாற்ற முடியும். அதன் பின்னர், நமக்கு கண்டிப்பாக ஒரு ஒளி மயமான எதிர்காலம் அமையும்.

No comments:

Post a Comment