Monday 3 January 2022

எதில் எப்படி எங்கு யாரிடம் .

 எதில் எப்படி எங்கு யாரிடம் .

சந்தேகம் என்பது மிகப் பெரிய கொடிய நோய். இந்த சந்தேக நோய் எவ்வித கிருமிகள் இல்லாமலே ஒரு மனிதனுக்குப் பிறவியிலோ அல்லது சந்தர்ப்ப சூழ்நிலையிலோ பரவக்கூடிய மிகப் பெரிய விசக்கிருமி.
சந்தேகப்படும் மனிதனும், சந்தேகத்திற்குரிய நபரும் அதிகமான அளவில் பாதிக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள் இவ்வுலகில் என்பதை நாம் அறிவோம்.
இந்த சந்தேகம் ஒவ்வொரு மனிதனையும்
மரணக்குழி வரை அழைத்துச் சென்ற உண்மைச் சம்பவங்களும் நிறைய உண்டு. நமது அன்றாட வாழ்வில் காண்கிறோம்.
எதில், எப்படி, யாரிடம், எங்கு, எவ்வாறு, எதற்காக என்பதை நன்கு அறிந்து கொண்டு சந்தேகப்படுவது ஆரோக்கியமான செயல்..
ஆனால் நம்மில் பலர் சம்பந்தமில்லாமலே வீண் சந்தேகப்பட்டு வாழ்வை தொலைத்தவர்கள் அதிகம்.
இதனால் பலர் வாழ்விழந்து வாழ்க்கையே கேள்விக்குறியாக்கிக் கொண்டு வாழும் மனிதர்களும் உண்டு.
ஒருவருக்கு வீண் சந்தேகம் வெளியிலும், வேலை செய்யும் அலுவலகத்திலும் இருந்தால் எவராலும் மதிக்கப்பட மாட்டார்கள்.
ஆம்.,நண்பர்களே
நாம் வாழ்வதற்காகவே இங்கு வந்து இருக்கின்றோம் என்பதை உணருங்கள்.. நம்பிக்கையோடு இனிதே வாழ்வைத் தொடங்குங்கள்
அனாவசியமாக மற்றவர்கள் மீது வீண்' சந்தேகம் வைத்து உங்களின் வாழ்க்கையில்
அல்லல்பட வேண்டாம்...
நமது அய்யன் வள்ளுவப் பெருந்தகை சொல்கிறார்
''தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும்.. (.குறள்:510..)
குறள் விளக்கம்:
ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும். என்கின்றார்.

No comments:

Post a Comment