Thursday 6 January 2022

மனநிறைவு தந்தவிழா!


 மனநிறைவு தந்தவிழா!

மாமனிதர் முல்லை முத்தையாவின் நூற்றாண்டுவிழா!
சிங்காரச்சென்னையில்,
தியாகராயநகரில், நேற்று
(05-01-2022)ஆம் நாள், சிறப்புமிகு சாகித்திய அகாதெமியும்,ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷகன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தமிழ்த் துறையும் இணைந்து நடத்திய பதிப்புலகத்தின் விடிவெள்ளி திரு.முல்லை முத்தையா அவர்களின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டேன். மிகப்பெரிய அரங்கில் பல்துறை வித்தகர்கள் பங்கேற்று நடைபெற வேண்டிய அரியதொரு விழா,கொரோனா கொடுந் தொற்றுக்காரணமாக உரிய நேரத்தில் நடைபெற இயலாமல் போனது. அப்படிப்பட்ட சூழ்நிலை யிலும் நூற்றாண்டு கண்ட
தகுதிமிக்க ஒரு பதிப்பாளரை, எழுத்தாளரை, தொகுப்பாளரை, மொழிபெயர்ப்பாளரை தக்க நேரத்தில் போற்ற வேண்டும் என்று கருதிய ஷகன் ஜெயின் மகளிர் கல்லூரியின் தமிழ்துறை யினரையும், சாகித்திய அகாதெமியையும், முல்லை முத்தையா குடும்பத்தினரையும் எத்தனைமுறை பாராட்டினாலும் தகும். விழா அரங்கம் சிறியதாக இருந்தாலும், எல்லா வகையான வசதிகளும் நிறைந்த நிறைவான அரங்கம். கலந்து கொண்ட விருந்தினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் துறையிலே முத்திரை பதித்தவர்கள்.
திரு.முல்லை முத்தையா அவர்களின் சிறப்பை அவர் அவர் பார்வையில் எளிமையான முறையில் எடுத்து உரைத்தது சிறப்புக்குரியது.தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் திரு.இசுந்தரமூர்த்தி அவர்கள்,எழுத்தாளர் திரு.மு.பழனியப்பன் அவர்கள்,திரு.திருவைபாபு அவர்கள்,பேராசிரியை திரு.நா.உமா மகேஸ்வரி அவர்கள்,பேராசிரியர் திரு.சொ.சேதுபதி அவர்கள், மற்றும் பலர் பேசினார்கள்.
விழாவிற்கு வந்திருந்த அனைவரும்,சிறப்பு விருந்தினர்களின் சொற்பொழிவுகளை அமைதியாகவும், ஆர்வத்தோடும் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்றியும்,
கேட்டு ரசித்தார்கள். விழாவிற்கு வந்திருந்த அனைவருக்கும்
தேநீர்,ரொட்டிகள்,பகல் உணவு,படித்திட இரண்டு புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கி உபசரித்தனர் முல்லை முத்தையா குடும்பத்தினர்.தங்களது
தந்தை காட்டிய வழியில் பயணித்து,அனைவரோடும் ஒன்றாகி, முல்லை முத்தையா அவர்களின் புகழை நிலைநாட்டி வருகிறார்கள் அக் குடும்பத்தார்கள்.
அவர்களின் இத்தகைய பண்பாட்டை எல்லோரும் போற்றவும்,பின்பற்றவும் வேண்டும். விழாவில் பதிப்பாளர்கள் பலரும், எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
முல்லை முத்தையா அவர்கள் போற்றி கொண்டாடிய பாவேந்தர் பாரதிதாசனின் பேரன் திரு.கோ.பாரதி அவர்களும் விழாவில் கலந்து கொண்டது மிகச்சிறப்பு.சாகித்திய அகாதெமியின் தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர்சிற்பி.பால
சுப்பிரமணியம் அவர்களின் பேச்சும் காணொளி வாயிலாக ஒளிப்பரப்பட்டது.
மொத்தத்தில் இந்த விழா முத்திரைபதித்த ஒரு விழாமட்டுமல்ல, அனைவரது மனதையும் கவர்ந்து,அனைவரது மனதிலும் நிறைந்து நின்று மனநிறைவை தந்ததொரு விழாவாக, தமிழர்களின் நெஞ்சங் களில்நிறைந்திருக்கும்.
அன்பு நண்பர் திரு.முல்லை மு.பழனியப்பன் அவர்களின் பணிசிறக்க வாழ்த்தி நிறைவு செய்கிறேன்.மிக்க நன்றி!
அன்பு நட்புடன்,
கவிஞர் அரிமழம் ப.செல்லப்பா
9791033913
aamchennai@gmail.com

No comments:

Post a Comment