Wednesday 19 January 2022

தமிழ் கடவுளாகிய முருகன் நின்ற நிலையில் உடலைவிடுத்து மகாசமாதி அடைந்த இடம்தான் " #குமார_பர்வதம் "

 தமிழ் கடவுளாகிய முருகன் நின்ற நிலையில் உடலைவிடுத்து மகாசமாதி அடைந்த இடம்தான் " #குமார_பர்வதம் "

உங்களில் பலர் கேள்விப்பட்டிருப்பது போல பார்வதிக்கு ஆறு குழந்தைகள். ஆறு வேறு தன்மையில் இருந்தன. இந்த ஆறு வேறு தன்மைகளும் ஒரே உடலில் இருந்தால் நன்றாக இருக்க முடியும் என்று பார்வதி கருதினார். செயலின் அடிப்படையில் அது உலகத்திற்கு ஒரு பெரிய மாற்றத்தைத் தரும் என்று அவர் நினைத்தார். அவர் ஒரு சிறந்த யோகினியாக இருந்ததால், இந்த ஆறு உயிர்களையும் ஒரே உடலுக்குள் கொண்டு வந்தார்.
தென்னிந்தியாவில், கர்நாடகா மாநிலத்தில், சுப்ரமண்யா என்று ஒரு இடம் உண்டு.
அந்த பகுதிகளில் அவர் குமரர் என்று அழைக்கப்படுவார். அவர் மஹாசமாதி அடைந்தவர். குமரர் ஒரு பெரிய யுத்தத்தில் போரிட்டு ஒழுங்குமுறையைக் கொண்டுவந்தார். பிறகு மேற்கு மலைத் தொடர்ச்சியின் சிகரத்திற்கு சென்றார். அதற்கு இப்போதும் " குமார பர்வதம் " என்று பெயர். அதன் உச்சியில் நின்றார். 47 நாட்கள் நின்றுவிட்டு, 48வது நாளில் உடலை உதறினார். பொதுவாக ஒரு யோகி விழிப்புநிலையில், விழிப்புணர்வோடு உடலை உதற நினைக்கிறபோது அமர்ந்த நிலையிலோ, சில நேரம் படுத்த நிலையிலோ இருப்பார். ஆனால் குமரர் நின்ற நிலையிலேயே தன் உடலை விட்டார்.
நான் ஏறக்குறைய ஒரு நாள் முழுக்க ஏறி அந்த மலைச்சிகரம் அருகே சென்றேன். அந்த அடிவாரத்தில் ஒரு முகாம் அமைத்திருந்தோம். என்னால் அந்த முகாமில் இரவு முழுக்க அமர முடியவில்லை. நான் அமருகிறபோதெல்லாம் அந்த சக்திநிலை என்னை நிற்கும் நிலைக்குத் தள்ளியது. என் உயரத்தை விட மூன்றடி அதிகமான ஒரு முகாமுக்குள் நான் உறங்குவதற்காக திட்டமிருந்தது. ஆனால் என் உடல் அந்த முகாமை குலைத்துக் கொண்டு எழுந்து எழுந்து நின்றது.
இந்த மலையுச்சிக்கு நீங்கள் போனால் சின்ன சின்ன கூழாங்கற்கள் இருக்கும். மிகச் சரியாக அளவெடுத்து வெட்டியதுபோல் அனைத்துக் கற்களும் ஆறுமுகம் கொண்டவையாக இருக்கும். அவை சண்முக லிங்கங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அவை சக்தி அதிர்வு மிக்க கற்கள். அவை ஏன் அத்தகைய கற்கள் ஆகின என்றால், அங்கே உடலை உதறிய யோகி அத்தகைய சக்திநிலை கொண்டவராக இருந்தார்.
நன்றி ஆன்மீக களஞ்சியம்

No comments:

Post a Comment