Friday 23 July 2021

சிவபெருமான் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்ட திருக்கோலம் மகா சதாசிவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

 சிவபெருமான் இருபத்தி ஐந்து தலைகளும், ஐம்பது கைகளையும் கொண்ட திருக்கோலம் மகா சதாசிவ மூர்த்தி என்று அழைக்கப்படுகிறது.

இத்திருவுருவம் சிவனது அறுபத்து
நான்கு திருக்கோலங்களில் ஒன்றாகும். மகா சதாசிவ மூர்த்தி கைலையில் உள்ளார். இவரைச் சுற்றி, இருபத்தி ஐந்து மூர்த்திகளும் இருப்பதாகவும், ருத்ரர்களும், சித்தர்களும், முனிவர்களும் வணங்கக்கூடியவராகவும் இருக்கிறார். இந்த மகா சதாசிவ மூர்த்தி வடிவம் கோயில்களில் சிலை வடிவில் காணப்படுவதில்லை. பெரும்பாலும் கோயில் கோபுரங்களில் சுதை வடிவில் காணப்படுகின்றன.
மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் அங்கயற்கண்ணி அம்மையின் கிழக்கு முதற் கோபுரத்திலும், காஞ்சிபுரம் கரகரேசுவர்ர் கோயிலின் விமானம், வைத்தீசுவரன் கோயில் கோபுரம், தில்லைக் கோயில் கோபுரம் ஆகியவற்றில் சுதை வடிவில் மகா சதாசிவ மூர்த்தி வடிவம் காணப்படுகிறது.
நன்றி பழ சிவசாமி

No comments:

Post a Comment