Monday 12 July 2021

மீட்ட_மறந்த_ஆனந்தயாழை

 #மீட்ட_மறந்த_ஆனந்தயாழை

2000 மாவது ஆண்டுகளின் ஆரம்பத்தில் ஒரு இளைஞர் ,
பாடலாசியராக மெல்ல தமிழ் சினிமா உலகிற்குள் நுழைகிறார்.
அதுவரை யாரும் அறிந்து இருக்க மாட்டார்கள்,ஏன் சினிமாத் துறையினர் கூட எதிர்ப்பார்த்து இருக்கமாட்டார்கள்..,அடுத்த 10,15 ஆண்டுகள் தமிழ் சினிமாவின் முடி சூடா மன்னனாக நா.முத்துக்குமார் என்ற இளைஞர் இருக்கப்போகிறார் என்று..!
அகராதியில் தமிழ் என்ற சொல்லுக்கு அர்த்தம் தேடினால் நிச்சயம் முத்துக்குமார் என்ற பெயரும் இடம்பெற்றிருக்கும்.
அந்தளவிற்கு அவர் பாடல்களில் தமிழ் வாழ்ந்தது.பாடகர்கள் எளிதில் உச்சரிக்க கூடிய வார்த்தைகளை மாலையாக கோர்த்து பாடலாக்கி தருவதில் வல்லவர் நா.முத்துக்குமார்.
'ஆனந்த யாழை','சித்திரையில் என்ன வரும்','முன் அந்தி மாலை நீ',
'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை',
'என் காதல் சொல்லநேரமில்லை',
'வாம்மா..துரையம்மா','வெண்மேகம் பெண்ணாக','கண் பேசும் வார்த்தை'
'அழகே..அழகின் அழகே'போன்ற எண்ணற்ற சூப்பர் ஹிட் பாடல்களை எழுதி,தமிழ் சினிமா உலகில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதித்தவர் நா.மு அவர்கள்.
பெரும்பாலும் இளைஞர்களை தனது பாடல்களை ரசிக்க வைத்ததன் மூலம்,அவர்களை தன்னுடைய ரசிகர்கள் வட்டத்திற்குள் கொண்டு வந்தார்.இன்று எத்தனையோ பாடலாசியார்கள் புதிது புதிதாக வந்தாலும் காலம் கடந்தும் அவர்களால் நிலைத்திருக்க முடிவதில்லை.
ஒரு படத்தின் வெற்றியில் பாடல்களுக்கும் பங்கு உண்டு என நிரூபித்து காட்டியவர் நா.முத்துக்குமார் அவர்கள்.ஒரு கவிஞராக,எழுத்தாளராக,ஒரு பன்முகத்தன்மைமிக்க கலைஞனை விதி வரிய கரங்களால் பறித்து கொண்டது.எல்லா இசை ரசிகர்களையும் மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு சென்றபோது,
ஒவ்வொருவரும் தன் வீட்டில் ஒருவரை இழந்ததை போல தான் உணருகிறார்கள்.நானும் என் அண்ணனை இழந்ததை போல தான் உணருகிறேன்.ஏனென்றால் முத்துக்குமார் விலைமதிப்பற்ற ஆழ்கடல் முத்து...!
//மகாலிங்கம் கணபதி
இன்று நா. முத்துக்குமார் பிறந்த நாள்

No comments:

Post a Comment