Friday 30 July 2021

எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்.

 எப்போது மகிழ்ச்சி கிடைக்கும்.

செருக்கு என்பது ஓர் தீயகுணம், அதுவே பல தீய விளைவுகளுக்குக் காரணமும் கூட. செருக்கில் விழுந்தவர்கள் என்றுமே உயர்ந்த நிலையை அடைய முடியாது...
செருக்கு யாரிடம் இருக்கிறதோ!, அவர்கள் மற்றவர்களிடமிருந்து அன்பு, நட்பு, பாசம் போன்றவற்றைப் பெற இயலாது, அவர்களுக்கு நல்லவற்றைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். நல்லது சொன்னவர்களை அற்பமானவர்களாகக் கருதுவார்கள்...
செருக்கினை அழித்து, மற்றவர்களையும் மதித்து, அவர்களையும் அரவணைத்து, தன் வாழ்க்கைப் பாதையை சீராகக் கொண்டு சென்றால் அவர்களுக்கு வாழ்க்கையில் எத்தனையோ வெற்றிகள் கிடைக்கும். செருக்கின்மையே வாழ்க்கையின் வெற்றி. அந்த வெற்றியின் மறைபொருள்...
ஒரு அரசர், ‘யான் எனல்’ என்ற செருக்கு நிரம்பியவர். வேட்டைக்குச் சென்றபோது ஒரு துறவியை சந்திக்க நேரிட்டது. அவர் கண்களை மூடித் தியானம் செய்து கொண்டிருந்தார்...
அந்த துறவியைப் பார்த்து அரசன்..,
”நான் பல நாடுகளை வென்றவன், அது இது என்றெல்லாம் தன்னைப் பற்றிக் கூறிய அரசன், எல்லாம் தனக்கு இருந்தும் தான் ''நிம்மதி இல்லாமல்'' இருப்பதாகக் கூறி, தனக்கு எப்போது மகிழ்ச்சி கிடைக்கும் என கேட்டான்...
தியானம் கலைந்ததால் கண்விழித்த துறவி சற்றே சினமுற்று,
”நான் மரணித்தால்தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும்". என்று கூறிவிட்டு மீண்டும் கண்ணை மூடி தியானத்தில் ஆழ்ந்தார்...
நான் எத்தனை பெரிய அரசன் என்னையே அவமானப் படுத்துகிறீர்களா...?” என்றபடி சற்றும் சிந்திக்காமல் துறவியை கொல்வதற்காக் கத்தியை உருவினார் அரசர்...
''மூடியே!, நான் என்றால், என்னைச் சொல்லவில்லை, ‘நான்’ என்ற இறுமாப்பு மரணித்தால்தான் உமக்கு மகிழ்ச்சி கிடைக்கும் ...
"யான் எனும் செருக்கு" என்பது, உன் கண்ணில் விழுந்த தூசு போன்றது. அந்த தூசியைச் சுத்தம் செய்யாமல் உன்னால் எதையும் காண இயலாது...
எனவே!, நான் என்னும் செருக்கு என்கிற தூசியை சுத்தம் செய்துவிட்டு உலகத்தைப் பாருங்கள்''” என்று விளக்கினார் துறவி.

No comments:

Post a Comment