Tuesday 20 July 2021

திமுக,வில் இப்படி ஒரு எம்.எல்.ஏ.வா..?

 திமுக,வில் இப்படி ஒரு எம்.எல்.ஏ.வா..?

குளித்தலை தொகுதி எம்.எல்.ஏ மாணிக்கம்.
இரண்டாவது முறையாக இந்த தொகுதியிலிருந்து எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் . அவரது பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் குளித்தலை நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவர்களில் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்த நிலையில், வேறு வேலையாக அந்த வழியாக வந்த எம்.எல்.ஏ மாணிக்கத்தின் கண்களில் இந்த போஸ்டர்கள் பட்டுவிட,
காரில் இருந்து கீழே இறங்கியவர், "யாரைக் கேட்டு இங்கே போஸ்டர்கள் ஒட்டுகிறீர்கள். எனக்கு இதெல்லாம் பிடிக்காது. இந்த வேலையை யார் பார்க்க சொன்னது? எல்லா போஸ்டர்களையும் என் கண் முன்னாலேயே கிழித்து எறியணும். அப்போதுதான் நான் இங்கிருந்து கிளம்புவேன்" என உத்தரவிட்டுள்ளார்.
இதனால் பதறிபோன போஸ்டர் ஒட்டியவர்கள், எல்லா போஸ்டர்களையும் கிழித்து எறிந்துள்ளனர். அவர்களை எச்சரித்த எம்.எல்.ஏ மாணிக்கம், இந்த போஸ்டர்களை அச்சடித்த தனது ஆதரவாளர்களையும் போன் மூலமாக அழைத்து எச்சரித்துள்ளார்.
அதன்பிறகு, எம்.எல்.ஏ அலுவலகத்தில் தனது பிறந்தநாளை 100 பேர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி, எளிமையாகக் கொண்டாடியுள்ளார்.
இதுகுறித்து, குளித்தலை தி.மு.க எம்.எல்.ஏ மாணிக்கம்,
"நான் எனது பிறந்தநாளை எப்போதும் பெரிதாக கொண்டாடமாட்டேன். இது எல்லோருக்கும் தெரியும். ஆனால், என் ஆதரவாளர்கள் சிலர் ஆர்வமாக போஸ்டர்களை அச்சடித்து, பள்ளி சுவர் முழுக்க ஒட்டினார்கள். அதை பார்த்ததும் கோபம் வரவே அதை கிழித்து எறியச் சொன்னேன். 'இதுபோல் இனி பண்ணக்கூடாது' என்று எச்சரித்தேன். அதுவும், அரசுப் பள்ளி சுவற்றில் போஸ்டர்களை ஒட்டியது என்னை கோபபட வைத்தது. 'அரசுப் பள்ளியில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ போஸ்டர் அடித்து ஒட்டினார்'னு இதனால் ஆட்சிக்கு கெட்டப் பெயர் வராதா?னு ஆதரவாளர்களை கடுமையாக கண்டித்துள்ளேன். இனி, இதுபோல் நடந்துகொள்ளமாட்டார்கள். நாங்கள் இதற்கு முன்புவரை அந்த பள்ளி சுவரில் போஸ்டர்கள் ஒட்டியதில்லை. ஆனால், இதற்கு முன் இருந்தவர்கள் போஸ்டர்களை அதிகமாக ஒட்டி, சுவற்றை நாசம் செய்துவிட்டனர்.
அதில் எழுதப்பட்டிருந்த திருக்குறள் வாசகமெல்லாம் தெரியாத அளவுக்கு சுவர்கள் மோசமாகிவிட்டது. அதனால், உடனே அந்த காம்பவுண்ட் சுவர் முழுவதும் வெள்ளை அடிக்கச் சொல்லி, பள்ளி ஆசிரியர்கள் ஆலோசனையோடு அவர்கள் விரும்புகிற திருக்குறள்களை எழுத சொல்லியிருக்கிறேன். அந்த சுவரில் தி.மு.கவினர் மட்டுமல்ல, இனி யாரும் போஸ்டர்கள் ஒட்டாத அளவுக்கு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.
திமுக,வில் இப்படி ஒரு எம்.எல்.ஏ.வா..?



No comments:

Post a Comment