Wednesday 28 July 2021

ஏமாற்றும் மனிதர்கள்.

 ஏமாற்றும் மனிதர்கள்.

எதார்த்தம் ஆனால் உண்மை..
பழகுவதில் நான்கு விதமான மனிதர்கள் இருக்கிறார்கள்
1.எதிர்பார்த்தது எதுவோ அதற்காகவே பழகுவார்கள் கிடைத்ததும் சென்றுவிடுபவர்கள் மீண்டும் தேவைப்படும்போது வருவார்கள் 100 % சுயநல வாதிகள் இவர்கள்...!!
2.பலனை அடைவதற்காக சில நன்மையைச் செய்வார்கள் இப்படிப்பட்டவர்கள் கொடுப்பதற்க்கும் வாங்குவதற்க்கும் சரியாக இருக்கும்
அவரின் காரியத்தை நிறைவேற்ற நமக்கும் சில காரியம் செய்வார்கள் இப்படிப்பட்டவர்களிடம் தாராளமாக பழகலாம் ஆனால் இவர்கள் அனைவரிடமும் இப்படி பழக மாட்டார்கள்...!!
3.பலனை எதிர்பார்க்கவே மாட்டார்கள் அவர்களாகவே அனைத்தையும் செய்வார்கள் எதற்க்காக செய்கிறீர்கள் என்றால் நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள் என்பார்கள் அவர்கள் அன்பால் உங்களை திணறடிப்பார்கள்
இப்படிப்பட்டவர்களால்தான் நம் சமுதாயம் செழிக்கிறது இப்படிப்பட்டவர்களை உறவினராக நண்பனாக வைத்திருக்க குடுத்து வைத்திருக்க வேண்டும்...!!
4.யாருடனும் பழக்கம் அதிகம் இருக்காது ஆனால் அன்பு மிகுதியாக இருக்கும் அறிவும் அப்படியே அல்லது அன்பு செலுத்த தெரியாது இவர்களிடம் நாம் கேட்டால் பலன் அடையலாம்...!!
(உதாரணமாக தாத்தா பாட்டிகளைச் சொல்லலாம்) இவர்களிடம் பழகுவதற்கு தவம் செய்திருக்க வேண்டும்...!!
முதலாவதாக இருப்பவர்களால் தான் அதிகம் ஏமாற்றம் வருகிறது. இப்படி போலித்தன்மை வாய்ந்த மனிதர்களிடம் உங்களை எச்சரிக்கையாக இருந்து காத்துக் கொள்ளுங்கள். அவர்களை ஆராய்ந்து இனம் கண்டுகொள்ளுங்கள்...!!
மாற்றம் ஆரோக்கியமானதாக இருக்கலாம் ஆனால் ஏமாற்றம் என்றுமே ஆரோக்கியமற்றது...!!
மனிதனின் மாற்றத்தைப் புரிந்து கொள்ளுங்கள்...!!
வீணாக நம்பிக்கை வைத்து ஏமாறாதீர்கள்...!!
ஏமாற்றத்திலிருந்து மாற்றத்திற்கு வாருங்கள்...
நன்றி கோனாபட்டு சுப்பு

No comments:

Post a Comment