Thursday 22 July 2021

உயரத்தை எட்டலாம்.

 உயரத்தை எட்டலாம்.

நமக்கெல்லாம் சந்தனத்தைப் பற்றி தெரியும். மிகவும் குளுமையானது. நம் உடலில் உள்ள வெப்பத்தை தணிக்க அல்லது வாசனைக்காக பூசிக் கொள்வது வழக்கம் இல்லையா?சுப காரியம் என்றாலும் சரி மற்றவை என்றாலும் நாம் இதை பயன்படுத்துகிறோம் தானே.
இந்த மரங்கள் அதிகபட்சமாக 10 மீட்டர் உயரத்திற்கு வளரக்கூடியவை. இவ்வளவு நெடிய உயரத்திற்கு வளரக்கூடிய சந்தன மரங்கள் விஷபாம்புகளை அதிகம் கவருகின்றன. ஏனென்றால், சந்தன மரங்களை சுற்றியுள்ள சீதோஷ்ண நிலையை விட சந்தன குளிர்ச்சியாக இருக்கும். எனவே விஷப் பாம்புகளுக்கு பிடித்த இடமே சந்தன மரங்கள் இருக்கும் இடம் தான்.
ஆனால் பாருங்கள் எவ்வளவு விஷப்பாம்புகள் குடிகொண்டாலும், சூழந்திருந்தாலும் இந்த சந்தன மரங்கள் தன்னுடைய வாசத்தை அல்லது வீரியத்தை இழந்துவிடுகின்றதா?
இல்லவே இல்லை.
அது எப்போதும் போல குளிர்ச்சியாக, வாசனையாக எல்லோராலும் விரும்பப்படுவதாக இருக்கிறது.
அதுபோலத்தான் நம்முடைய சுற்றுப்புறத்திலும், எவ்வளவோ நெகடிவ் எனெர்ஜி கொடுக்ககூடிய விஷயங்கள் இருந்தாலும், அதனால் எந்தப் பாதிப்பும் கொள்ளாமல், நம்முடைய சுயத்தை இழக்காமல் நம் கடமையை தொடரந்து நம்பிக்கையுடன் செய்து கொண்டே வரும்போது அந்த சந்தன மரத்தை போல வாழ்வில் உயரத்தை எட்டலாம் என்பது உறுதி. முயன்று தான் பாருங்களேன்.

No comments:

Post a Comment