Tuesday 13 July 2021

ஓம்_நமச்சிவாயம்

 

✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴
காதல்ஆகிக் கசிந்து, கண்ணீா் மல்கி,
ஓதுவாா் தமை நன்னெறிக்கு உய்ப்பது ;
வேதம் நான்கினும் மெய்பொருள் ஆவது ;
நாதன் நாமம் நமச்சிவாயவே.
சொல்துணை, வேதியன், சோதி, வானவன்.
பொன்துணைத் திருந்து அடி பொருந்தக் கைதொழ,
கல்துணைப் பூட்டி ஓா்கடலில் பாய்ச்சினும்,
நல்துணை ஆவது நமச்சிவாயவே.
மற்றுப்பற்று எனக்கு இன்றி, நின் திருப்பாதமே மனம் பாவித்தேன் ;
பெற்றலும் பிறந்தேன் ; இனிப் பிறவாத் தன்மை வந்து எய்தினேன் ;
கற்றவா் தொழுது ஏத்தும் சீா்க்கறையூாில் பாண்டிக் கொடுமுடி
நற்றவா, உனை நான் மறக்கினும், சொல்லும் நா நமச்சிவாயவே.
✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳
நானேயோ தவம் செய்தன்? 'சிவாயநம' எனப்பெற்றேன்
தேனாய், இன் அமுதமும் ஆய்த்தித்திக்கும் சிவபெருமான்
தானேவந்து, எனது உள்ளம் புகுந்து, அடியேற்கு அருள் செய்தான்,
ஊன் ஆரும் உயிா் வாழ்க்கை ஒறுத்து, அன்றே வெறுத்திடவே.
✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴
அற்புதத் தெய்வம் இதனின் மற்று உண்டே ?
அன்பொடு தன்னை அஞ்செழுத்தின்
சொற்பதத்துள் வைத்து, உள்ளம் அள்ளுறும்
தொண்டருக்கு எண்திசைக் கனகம்.
பற்பதக் குவையும், பைம்பொன் மாளிகையும்,
பவள வாய் அவா் பணை முலையும்,
கற்பகப் பொழிலும், முழுதும் ஆம், கங்கை
கொண்ட சோளேச் சரத்தானே.
✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴
மிண்டு மனத்தவா் போமின்கள் ; மெய் அடியாா்கள்
விரைந்து வம்மின் ;
கொண்டும் கொடுத்தும் குடிகுடி ஈசற்கு
ஆட்செய்மின் குழாம்ணஅ புகுந்து
அண்டம்கடந்த பொருள், அளவு இல்லதோா்
ஆனந்தப் வெள்ளப் பொருள்,
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே
பல்லாண்டு கூறுதுமே.
✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴
இருவினைப் பாசம் முமலக்கல் ஆா்த்தலின்,
வருபவக் கடலில் வீழ்மாக்கள் ஏறிட,
அருளும் மெய் அஞ்செழுத்து அரசை, இக்கடல்
ஒரு கல் மேல் ஏற்றிடல், உரைக்க வேண்டுமோ ?
✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳
✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴✳✴
🌀நமச்சிவாய வேணு ஆறுமுகப்பிள்ளை புதுவை🌀
நன்றி இறையருள்

No comments:

Post a Comment