Monday 12 July 2021

தனி கொங்கு நாடு சாத்தியமா?*

தனி கொங்கு நாடு சாத்தியமா?*
*ஒரு மாநிலத்தை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்றால், அதற்கு அம்மாநில சட்டப்பேரவையில் ஒப்புதல் அளிக்க வேண்டும்.*
*தமிழகத்தை இரண்டாக பிரிக்க தற்போது ஆட்சியில் உள்ள திமுக சம்மதிக்குமா? இல்லை சட்டப்பேரவையில் ஒப்புதல் தான் வழங்குமா?*
*அப்படி ஒருவேளை பிரித்தே ஆக வேண்டுமென்றால் ஜம்மு & கஷ்மீரில் செய்தது போல, மாநிலத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356 ஐ பயன்படுத்தி, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்திய பிறகு, ஆளுநர் ஒப்புதலை சட்டப்பேரவையின் ஒப்புதலாக பெற்று, பின்னர் மாநிலத்தை இரண்டாக பிரிப்பதற்கான சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற முடியும்.*
*அப்படி என்றால் மத்திய அரசு, மாநில ஆட்சியை கலைத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த போகிறதா?*
*முதலில் அதற்கான சாத்தியம் தான் உள்ளதா?*
*ஜம்மு-காஷ்மீரில் கூட சட்டசபை ஏன் முடக்கப்பட்டது என்றால் அங்கு அரசியல் குழப்பம் நிலவியது. யாருக்கும் பெரும்பான்மை இல்லை. யாரும் ஆட்சி அமைக்க முன் வரவும் இல்லை.*
*அதனால் அங்கு மாநில சட்டப்பேரவை முதலில் தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டு, பின்னர் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு ஆளுநர் ஆட்சியும், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.*
*ஆனால் தமிழகத்தில் அதற்காக எந்த சாத்தியமும் இருப்பதாக தெரியவில்லை.*
*தமிழகத்தில் இங்கே பெரும்பான்மை கொண்ட அரசு உள்ளது. இங்கே அரசியல் நிலையற்ற தன்மையும் இல்லை, அரசியல் குழப்பமும் இல்லை. எனவே மாநில சட்டப்பேரவையை முடக்கி வைக்கவும் முடியாது கலைக்க முடியாது.*
*ஒருவேளை சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்ற காரணம் காட்டி குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் மட்டுமே உண்டு.*
*ஆனால் அதற்கான வாய்ப்பு 90% குறைவு*

No comments:

Post a Comment