Friday 16 July 2021

அசைப்படுவதும் அவசரப்படுவதும்.

 அசைப்படுவதும் அவசரப்படுவதும்.

பொறுமை என்பது செயலற்ற தன்மை அல்ல. மாறாக அது செயலாற்றும் திறமை. ஒருங்கிணைக்கப்பட்ட வலிமை என்பார் ஓர் அறிஞர்.வார விடுமுறைக்கு ஏழு நாட்களும்,வாங்குகிற ஊதியத்துக்கு ஒரு மாதமும் காத்திருக்கிறோம்.தேர்வு எழுதி முடிவு அறிய ஓராண்டு, வேலை தேடிக் கொள்ளவும், திருமணம் செய்து கொள்ளவும் சில ஆண்டுகள் எனக் காத்திருப்பு தொடர்கிறது.
மிகப்பெரிய சாதனையை, மகத்தான வெற்றியை நீங்கள் ஒரே நாளில் பெற்றுவிட முடியாது. ஆண்டுக்கணக்கில் தயாரிப்புகள், பயிற்சிகள் தேவைப்படும்.
தண்ணீரை சல்லடையால் அள்ள முடியுமா? முடியும். அது ஐஸ் கட்டியாக உறைகிறவரை பொறுத்திருக்க வேண்டும்.
உலகத்தையே வெற்றி கொள்ளப் போகிறேன்' என்று ஆசைப்பட்டான் மாவீரன் அலெக்ஸாண்டர். மிகப்பெரிய வீரன், மிகப்பெரிய ஆசை. ஆசைப்படுவதில் தவறில்லை. அவசரப்படுவதுதான் தவறு. அவன் முறையான திட்டமின்றி கால்போன போக்கில் படை நடத்தினான். கண்ணில் பட்ட மனிதர்களைத் தோற்கடித்தான். நாடுகளைக் கைப்பற்றினான்.எல்லாவற்றையும் ஒரே மூச்சில் செய்துவிட நினைத்தான். அவனுடைய வீரர்கள் ஓய்ந்து போனார்கள். அவனுந்தான். தன்னுடைய வெற்றிகளை நிதானமாய் சுவைக்க அவகாசம் இல்லாமல் போயிற்று. நோயுற்று மாண்டுபோனான். வாழ்கிற காலத்தில் அவன் சொல்வான் 'வாய்ப்புகளை நானல்லவோ உண்டுபண்ணுகிறேன்' என்று.
இங்கே கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது ஒன்று'சில வாய்ப்புகளை உருவாக்கலாம் ஆனால் சில வாய்ப்புகளைக் காத்திருந்துதான் பெற வேண்டியிருக்கும் .

No comments:

Post a Comment