Monday 18 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
17.11.2019
ஞாயிற்றுக்கிழமை
 
👉இன்று மாணவர்கள் தினம்
1939 ஆம் ஆண்டில் இதே நாளில் செக்கோசிலவாக்கியாவின் தலைநகர் பிராக்கில் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மாணவர் போராட்டம் நாசிப் படைகளினால் நசுக்கப்பட்டமை, போராட்டத்தின் முடிவில் ஜான் ஓப்ளெட்டல் மற்றும் ஒன்பது மாணவர் தலைவர்கள் தூக்கிலிடப்பட்டமை, செக்கொசிலவாக்கியா ஆக்கிரமிப்புக்குள்ளாமை போன்ற நிகழ்வுகளின் ஞாபகார்த்தமாக இந்நாள் அநுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
⛹‍♀⛹🏿⛹‍♀
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று
🎶
குருவிகளா.. குருவிகளா..
உல்லாசக் குருவிகளா..
தருவீர்களா.. பதில் தருவீர்களா..
தடையின்றித் தருவீகளா...
குழந்தைகளே.. குழந்தைகளே..
காலேஜுக் குழந்தைகளே
பெறுவீர்களே.. பெறுவீர்களே..
தடையின்றிப் பெறுவீகளே..
மஞ்சளை மறந்தது ஏன்.. ஏன்.. ஏன் ?
மலரைத் துறந்ததும் ஏன்.. ஏன்.. ஏன்.. ?
கஞ்சியை மறந்ததும் ஏன்.. ஏன்.. ஏன்.. ?
காப்பி குடிப்பதும் ஏன்.. ஏன்..
வேட்டியை மறந்ததும் ஏன்.. ஏன்.. ஏன் ?
மீசை குறைந்ததும் ஏன்.. ஏன்.. ஏன் ?
பாட்டிக்கு பவுடரும் ஏன்.. ஏன்.. ஏன் ?
பகட்டித் திரிவதும் ஏன்.. ஏன்.. ?
(குருவிகளா)
குடுமியை மறந்ததும் ஏன் ஏன் ஏன் ?
கோணல் கிராப்புகள் ஏன் ஏன் ஏன் ?
உடையும் குறைந்தது ஏன் ஏன் ஏன்
ஒட்டு முடிகளும் ஏன் ஏன் ?
மாறிடும் காலத்தைப் பார் பார் பார்
மாற்றம் தடுப்பவர் யார் யார் யார்
போனது போகட்டும் வா வா வா
போகும் வழி ஒன்றுதான்...
குருவிகளா.. குருவிகளா..
உல்லாசக் குருவிகளா..
படம் :அக்கா தங்கை

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment