Tuesday 12 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
10.11.2019
ஞாயிற்றுக் கிழமை
 
👉🏻இன்று உலக அறிவியல் தினம்
💡💡💡
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று
🎶
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
நிலை மாறினால் குணம் மாறுவான்
பொய் நீதியும் நேர்மையும் பேசுவான்
தினம் ஜாதியும் பேதமும் கூறுவான்
அது வேதன் விதி என்றோதுவான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
பறவையை கண்டான் விமானம் படைத்தான்
பாயும் மீன்களில் படகினை கண்டான்
எதிரொலி கேட்டான் வானொலி படைத்தான்
எதனை கண்டான் பணம்தனை படைத்தான்
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
இன்பமும் காதலும் இயற்கையின் நீதி
ஏற்ற தாழ்வுகள் மனிதனின் ஜாதி
பாரில் இயற்கை படைத்ததை எல்லாம்
பாவி மனிதன் பிரித்து வைத்தானே
மனிதன் மாறிவிட்டான் மதத்தில் ஏறிவிட்டான்
வந்த நாள் முதல் இந்த நாள் வரை
வானம் மாறவில்லை
வான் மதியும் மீனும் கடல் காற்றும்
மலரும் மண்ணும் கொடியும் சோலையும்
நதியும் மாறவில்லை
மனிதன் மாறிவிட்டான்
படம்: பாவமன்னிப்பு

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment