Tuesday 19 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இடைத்தேர்தல் தோல்வியை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்ள திமுக தலைவர் ஸ்டாலினுக்கு உதறல் எடுத்து வந்த நிலையில் எப்பாடு பட்டாவது இத்தேர்தலை தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்கிற அவர் முயற்சியில் தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதிதியை டிசம்பர் முதல் வாரத்திற்குள் அறிவித்து டிசம்பர் கடைசியில் வாக்குப் பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முடித்துவிட வேண்டும் என்பது தான் ஆளும் கட்சியான அதிமுக வின் கணக்கு.
மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையை முடித்து உள்ளாட்சித் தேர்தலை அறிவிக்க அதிமுக அரசு ஜரூராக தயாராகி வருகிறது. அதிமுக சார்பில் விருப்ப மனு விநியோகமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக தேர்தல் ஆணையர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் டிசம்பர் 2ந் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணையை வெளியிட உள்ளதாக கூறினார்.
அப்போது திமுக சார்பில் ஆஜரான வழக்கறிரும் அக்கட்சியின் எம்பியுமான வில்சன், திடீரென ஒரு உப்பு சப்பில்லாத விஷயத்தை கொண்டு வந்தார்.
தமிழகத்தில் தற்போது புதிதாக ஒன்பது மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஒன்பது மாவட்டங்களின் உள்ளாட்சி அமைப்புகளை மறுவரையறை செய்யாமல் தேர்தல் நடைபெற்றால் அது சரியாக இருக்காது என்று வில்சன் வாதாடினார்.
மேலும் மாவட்டங்களை பிரித்த பிறகு ஊராட்சி குழு உறுப்பினர்கள், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தேர்தலில் சிக்கல் வரும் என்றும் அவர் கூறினார்.
இதனை தொடர்ந்து வழக்கை டிசம்பர் கடைசிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை நடத்த விடாமல் தடுத்த திமுக தற்போதும் ஏதோ உப்பு சப்பில்லாத விஷயத்தை கூறி தேர்தலை தடுத்துவிட்டது.
ஆனால் ஸ்டாலின் வெளியில் பேசும் போது..?
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment