Tuesday 19 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
18.?11.2019
திங்கட்கிழமை
 
👉இன்று வ. உ. சி என்றழைக்கப்படும் சிதம்பரம்பிள்ளை நினைவு தினம்-1936.
இந்திய விடுதலைப் போராட்ட
வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
பிரித்தானிய அரசால் தேசத் துரோகியாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.
🛳🚢
கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று
🎶
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
(உன்னை)
மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொண்டு
ஊருக்கும் சொல்பவர்கள் தலைவர்கள் ஆவதில்லையா
(உன்னை)
பூமியில் நேராக வாழ்பவர் எல்லோரும்
சாமிக்கு நிகர் இல்லையா
பிறர் தேவை அறிந்து கொண்டுவாரிக்கொடுப்பவர்கள்
தெய்வத்தின் பிள்ளை இல்லையா
(உன்னை)
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
உன்னை அறிந்தால்...
நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்
படம் : வேட்டைக்காரன்

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment