Thursday 21 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'' நான் தான்" என்பது.
..................................
''நான்'' என்பது அகந்தை மிகக் கொண்டது. அங்கே அன்பு இருக்காது. உண்மை நிலவாது. "நான் தான் எல்லாம்” என்னும் உணர்வுகள் நம்மை ஆட்டிப் படைக்கும் தன்மை கொண்டது.
அது உங்களை மற்றவர்களிடம் இருந்து பிரித்துத் தனிமைப்படுத்தும் எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடியது.
'நான் தான்' என்று உச்சரிக்கும் போது நீங்கள் அனைவரையும் விட்டு விலகிச் செல்கின்றீர்கள். அது ஆணவத்தின் ஆரம்பம்.
ஆற்றங்கரை ஓரத்தில் ஓங்கி வளர்ந்து இருந்தது ஒரு அரச மரம்,,அந்த மரம் மிகவும் உயரமாகவும்,, மிகுந்த பலத்துடன் இருந்தது. ஆனால் அதற்குத் தான் என்ற கர்வம் அதிகம்.
புயலே அடித்தாலும் கூட என்னை ஒன்றும் செய்யாது என்றும்,, மற்றும் நான் யாருக்கும் தலை வணங்க மாட்டேன் என்று அகந்தையுடன் ,
கர்வத்துடன் இருந்தது.
அந்த அரச மரம் அருகில் நாணல் புல்லும் ஒன்றும் வளர்ந்து இருந்தது. மற்றும் நாணல் புல்லை அடிக்கடி கேலி செய்தும் வந்தது அந்த மரம்.
ஆனால் நாணல் புல்லோ எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தது.
ஒருமுறை புயல் காற்று மிக வேகமாகச் சுழன்று ,சுழன்று அடித்தது.அதன் வேகம் தாங்காமல் அரச மரம் வேரோடு கீழே சாய்ந்து விழுந்தது..
ஆனால் நாணலோ காற்றுக்கு வளைந்து கொடுத்து.கீழே சாய்ந்து விடாமல் தன்னைக் காத்துக் கொண்டது..
கீழே கிடந்த அரச மரத்திற்கு ஒரே வியப்பு.இவ்வளவு பெரிய ஆளான நானே. கீழே விழுந்து கிடக்க,,, இந்த சின்னஞ்சிறிய நாணல் எப்படி எந்தவித பாதிப்பும் இல்லாமல் அப்படியே நின்று கொண்டு இருக்கிறது என்று ஆச்சரியமாகப் பார்த்தது..
தன் சந்தேகத்தை நாணலிடமே கேட்டது,
அதற்கு அந்த நாணல், ''அரசமரமே நீ ஆணவத்துடன் புயலோடு எதிர்த்து நின்றாய்..
நானோ, பணிவுடன் புயலுக்குத் தலை வணங்கி வளைந்து கொடுத்தேன் என்றது.
ஆம்.,நண்பர்களே..,
நான் இல்லை என்றால் எதுவும் நடக்காது, என்ற எண்ணம், ஓர் மமதையை..
அது மயக்கத்தில் ஆழ்த்தும் எண்ணமாகும். இதைத் தவிர்த்தல் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு நன்மை பயக்கும்..

No comments:

Post a Comment