Saturday 30 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

‘’விருப்பத்துடன் செய்தால்''
...................................
வேலைகளில் சின்ன வேலை, பெரிய வேலை என்று எல்லாம் எதுவுமே கிடையாது. விரும்பி செய்கிற வேலை, பிடிக்காமல் செய்கிற வேலை என்று இரண்டு தான் உண்டு.
ஒரு வேலையைக் கடினம் என்று நீங்கள் நினைக்கின்ற போதே அதை நீங்கள் விரும்பி செய்யவில்லை என்பது தான் அதற்கு அர்த்தம் .
அனுபவித்துச் செய்கிற எந்த வேலையையும் ஏனோதானோ என்று செய்தோம் என்று வெற்றி பெற்றவர்கள் யாரும் சொல்வதில்லை.
எழுத்தாளர் சுஜாதாவிடம்.,
இவ்வளவு புத்தகங்கள் படிக்கிறீர்களே .. உங்களுக்கு இது சிரமமாக இல்லையா “ என்று கேட்டதற்கு
''இதை வேலையாகச் செய்கிறவனுக்குத் தான் இது சிரமம்... நான் எனது விருப்பமாக இதைச் செய்கிறேன்” என்றார் .
வேலையை விருப்பத்தோடு செய்கிற யாரும் “மிகக் கடினம் ” என்று அங்கலாய்த்துக் கொள்வதில்லை. துன்பப்பட்டு உங்களை யார் அந்த வேலையை அப்படிப் பார்க்கச் சொன்னது?
இதே வேலையை விரும்பிச் செய்ய ஆயிரம் பேர் இருக்கிறார்களே,. அவர்களிடம் அதை விட்டு விடலாமே.
ஒரு வேலையை விரும்பிச் செய்கிற போது உங்களுக்கு அதன் சிரமம் தெரிவது இல்லை .
விருப்பம் இல்லாமல் செய்கிற போது துன்பம் பல மடங்கு ஆகிறது .
நீங்கள் அழுதாலும்,, புரண்டாலும் ஒரு வேலையை நீங்கள் தான் செய்தாக வேண்டும் என்றால் ஏன் அதற்காக அழ வேண்டும்.?
உங்கள் வேலையைத் திறம்படச் செய்ய வேண்டும் என்றால் அதனை விரும்பி செய்பவராக நீங்கள் இருக்க வேண்டும்.
உங்கள் வேலையில் ஆர்வம் இல்லை என்றால் அதனைக் கற்றுக் கொள்ள இயலாது..
அதை மகிழ்வுடன் செய்தால் மட்டுமே நீங்கள் ஆசைப்படுவது உங்களுக்கு மிகவும் அருகில் வரும்...
ஆம்.நண்பர்களே..,
நாம் ஈடுபடுகின்ற எந்த செயலானாலும் உள் அன்போடும், பொறுப்பு,, கடமை உணர்ச்சியுடன் விரும்பிச் செய்தால் எந்தப் பணியையும் எளிதாகச் செய்யலாம் அந்தப் பணியில் வெற்றியும் அடையலாம்.🌹🙏🏻🌹

No comments:

Post a Comment