Monday 18 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

*சிறு கவனம் சிகரம் சேர்க்கும்.*
எந்த சூழ்நிலையிலும் விழிப்புணர்வோடு செயல்படுகிறவர்கள் மகத்தான செயல்களை செய்கின்றார்கள்.
ஒரு உயரிய பணியில் இருக்கின்ற போது ஆழ்ந்த கவனமும் மிக அவசியம்..
அறிவியல் மாமேதை நியூட்டன், தன்னுடைய வெற்றிக்குக் காரணமான செயல்களில் மிகவும் முக்கியமானதாகக் குறிப்பிடும் குணம் என்ன தெரியுமா? விழிப்புணர்வுடன் கூடிய ஆழ்ந்த கவனம்.
அறிவியல் துறையில் நான் இந்த அளவிற்கு சாதித்திருக்கிறேன் என்றால், அதற்கு அடிப்படைக் காரணம்,
என் கவனம் முழுவதையும் நான் என் துறையில் பதித்தது தான். இதைத்தவிர வேறொன்றுமில்லை… என மிகவும் உறுதியாக, தெளிவாகத் தன் கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.
விண்வெளியில் பரந்து சாதனை புரிவதற்க்காகத் தேர்வு செய்யும் இறுதிக் கட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின், டிட்டோச் ஆகிய இரண்டு விண்வெளி வீரர்கள் வந்து இருந்தார்கள்..
அப்போதைய திட்டப்படி இறுதியாக இருவரில் ஒருவர் மட்டுமே தேர்ந்து எடுக்க வேண்டும்.. இதனால் அவர்களுக்குள் போட்டி வைத்து ஒருவரைத் தேர்ந்து எடுக்க விரும்பினார்கள் விண்வெளி விஞ்ஞானிகள்..
இருவரையும் வயர்கள் இணைக்கப்பட்ட கட்டிலில் தனித் தனியாக தூங்க வைத்தார்கள்..மறுநாள் எழுந்ததும் இருவரது அனுபவங்களைக் கேட்டார்கள்.
யூரிகாகரின் விழிப்போடு மிகுந்த கவனத்துடன் இருந்ததால் தனக்கு அந்த வயரிலான கட்டலில் ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.
மற்றொரு விண்வெளி வீரரான டிட்டோச் நன்றாகத் தூங்கி விட்டதால் அவரால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.அதனால்யூரிகாகரின் தேர்வு செய்யப்பட்டார்.
விண்வெளியில் பரந்து சாதனை படைத்தார்..
எந்தச் செயல் செய்யும் போதும் விழிப்புணர்வும்,ஆழ்ந்த கவனமும் இருந்தால் வெற்றி நிச்சயம்..
நீங்கள் ஒரு செயலில் ஈடுபடும் போது விளைவுகளைப் பற்றி நினைக்காதீர்கள்..அந்த வேலை பெரியதோ, சிறியதோ என்பது முக்கியம் இல்லை..
வேலையைச் சிறந்த முறையில் எப்படி செய்வது என்பதில் மட்டும் கவனமாக இருங்கள்..அதனால் உங்களுக்கு மகிழ்ச்சியும், திருப்தியும் ஏற்படும்.

No comments:

Post a Comment