Tuesday 26 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசு வாட்ஸ் அப்
குறுஞ்செய்தி & வாட்ஸ் அப் சேவையில் 11வது ஆண்டு.
26.11.2019
செவ்வாய்கிழமை
 
👉இன்று இந்திய அரசியலமைப்பு நாள்.
இந்நாள், 2015
நவம்பர் 26 ஆம் திகதியன்று முதல் முறையாக அனுசரிக்கப்படுவதாகவும். மேலும் இந்திய அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட தினமான நவம்பர் 26 ஆம் நாளை, அரசியலமைப்பு தினமாகவும், கொண்டாடப்படுகிறது.

கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று.
🎶கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
ஆண்டான் அடிமை மேலோர் கீழோர் என்பது மாறாதோ?..
அரசன் இல்லாமல் ஜனங்கள் ஆளும் காலமும் வாராதோ?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைதது பதில் ஒன்று
இன்று எவனும் பேதம் சொன்னால்
இரண்டு வருடம் ஜெயில் உண்டு.
கேள்வி பிறந்தது அன்று...
வானத்தில் ஏறி சந்திரமண்டல வாசலைத் தொடலாமா?
மாண்டு கிடக்கும் மனிதனின் மேனி மறுபடி எழலாமா?
என்றொரு காலம் ஏங்கியதுண்டு
இன்று கிடைத்தது பதில் ஒன்று
ஞானம் பிறந்து வானில் பறந்து
மீண்டு வந்தான் உயிர் கொண்டு
கேள்வி பிறந்தது அன்று..
குலமகள் வாழும் இனிய குடும்பம் கோவிலுக்கிணையாகும்
குறை தெரியாமல் உறவு கொண்டாலே வாழ்வும் சுவையாகும்
படித்த மாந்தர் நிறைந்த நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடமை
நல்ல மனமும் பிள்ளை குணமும் நமது விட்டின் தனி உடைமை
கேள்வி பிறந்தது அன்று நல்ல
பதில் கிடைத்தது இன்று
ஆசை பிறந்தது அன்று
யாவும் நடந்தது இன்று
படம்: பச்சைவிளக்கு

🙏🏻கண்ணன்சேகர்
9894976159.

No comments:

Post a Comment