Tuesday 19 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

'' உலகில் மூன்று வித மனிதர்கள்..'' ..........................
உலகில் மூன்று வித நிலைகளில் இயங்கும் மனிதர்கள் இருக்கிறார்கள். தன்னைப் பற்றிய பொறுப்பைக் கூட ஏற்றுக் கொள்ளாமல், யார் கையிலாவது தன்னை ஒப்படைக்கக் காத்திருப்பவர்கள் ஒரு வகை.அவர்கள் புழுவை விடக் கேவலமானவர்கள்.
மற்றவர்களைப் பற்றி கவலையின்றி, தன்னை மட்டும் பார்த்துக் கொள்பவன் அடுத்தவன்..இவன் சுயநலவாதி. மிருகத்தைப் போன்றவன்.
மிருகங்கள் பொதுவாக யாருக்கும் தீங்கு நினைப்பது இல்லை. சிங்கம் பசித்து இருக்கும் போது எதிரே போனால், அது உங்களை உணவாகப் பார்க்கிறது.மற்ற நேரத்தில், அது உங்களை எதிரியாகக் கூடப் பார்க்காது..
தன்னைச் சுற்றி உள்ளவர்களுக்கு ஒரு தேவை என்றால் அவர்கள் கேட்காமலேயே, தாமாகவே முன் வந்து,அவர்களின் தேவையை அறிந்து உதவி செய்பவர்கள் மூன்றாவது வகை..
இவர்கள் தாம் மனிதன் என்ற சொல்வதற்கு அருகதை உள்ளவர்கள்..
ஒருவருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு, ஒரு புதிய அறை ஒதுக்கப்பட்டது. தனக்குக் கீழே பணிபுரிபவர்களுக்கு எதிரில் தன்னைப் பெரிய ஆளாகக் காட்டிக் கொள்ள விரும்பினார் அவர். அறைக் கதவு தட்டப்பட்ட போது,, டக்கென்று தொலைபேசி ரிசீவரை எடுத்துக் காதில் வைத்துக் கொண்டார்..
நிறுவனத்தின் முதலாளியுடன் உரிமையோடு பேசுவது போல் பாவனை செய்தார்.
பிறகு தான் உள்ளே வந்தவனை கவனித்ததாகக் காட்டிக் கொண்டு, ''சொல் தம்பி, உனக்கு என்ன வேண்டும்?” என்றார்.
அவன் நமுட்டுச் சிரிப்பு சிரித்து விட்டு சொன்னான்…
''ஐயா, தங்கள் அறையில் உள்ள தொலைபேசிக்கு புதிய இணைப்பு கொடுக்க வந்து இருக்கிறேன் என்றான்..
மற்றவர்களிடத்தில் செயற்கையாகத் தன் பிம்பத்தை உயர்த்திக் காட்டுவதற்காக முனைபவர்கள் இப்படித் தான் மூக்கு உடைபடுவார்கள்.
ஆம்.,நண்பர்களே..,
பொறுப்புகளைத் தட்டி கழிக்காதீர்கள்,தப்பி ஓடப் பார்க்காதீர்கள்..
அப்படிச் செய்தால் உங்களுக்கு மன அமைதி கிடைக்காது. அதிகமான கவலைகள் தான் வந்து சேரும்..
உங்கள் சுயநலத்திற்காக மற்றவர்களை பயன்படுத்தாதீர்கள்..
மரம் உதவுகிறது நிழல் தந்து., புல்லங்குழல் உதவுகிறது.. இசைக்கு தன் உயிர் தந்து...ஏணி கூட உதவுகிறது நம்மை மேலே ஏற்றி விட..
ஆறறிவு உள்ள மனிதர்களான நாம் முடிந்த அளவு பிறர்க்கு அவர்கள் கேட்காமலே அவர்களின் தேவை உணர்ந்து உதவி செய்ய வேண்டும்..
நாம் செய்தது நமக்கே திரும்ப வரும் என்பது தான் பிரபஞ்ச விதி.. முடிந்த மட்டும் உதவுவோம்.

No comments:

Post a Comment