Thursday 14 November 2019

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மங்கிய மதிய வேளையில்
மலைச்சாரலில் மனதை
மயக்கும் மங்கைகள் இருவர்
மணாளனை நினைத்து பாடும்..
மதுர கீதமான இந்த
*பாடல் பிறந்த கதை:*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🎶 *அத்தான் என் அத்தான்*
 *கண்ணதாசன்*
🎻 *விஸ்வநாதன் ராமமுர்த்தி*
🎬 *பாவமன்னிப்பு* 1961
🎤 *பி.சுசீலா*
💃 *தேவிகா, சாவித்ரி*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
கண்ணதாசன் திரைத்துறையில் பெரிதும் மதித்து வந்த தனது ஆசானாக போற்றிய *கலைவாணர் என்.எஸ்.கே* அவர்கள் நினைவாய் பெயர் வைத்த *கலைவாணன் கண்ணதாசன்* அவர்களின் பேட்டியிலிருந்து...
அப்பா (கவியரசு) ஒருமுறை காரில் சென்று கொண்டிருந்த போது கடலை வாங்கி கொறித்திருக்கிறார். பொட்டலம் கட்டிய பேப்பரில்
*‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான்’*
என்ற வரிகளைப் பார்த்து அப்பாவுக்கு பொறி தட்ட, அந்த வரிகளை அடிப்படையாக வைத்து ஒரு பாடல் எழுதினார். அதுதான் 🎶 *‘அத்தான் என்னத்தான்...’* பாடல்.!
பாடல் முழுவதும் *'தான் தான்'* என்று முடியும் வரிகள் திரும்ப திரும்ப வந்து பாடலை மேலும் அழகு படித்தியிருக்கும்.!
ஆனால் அந்த பாடலுக்கு *வெகுகாலமாக எந்த இசையமைப்பாளரும் இசை வடிவம் கொடுக்க தாயாராக இல்லை.!*
கடைசியாக *‘பாவமன்னிப்பு’* படத்தில் ஒரு காட்சிக்கு இந்த பாடல் அத்தனை சிறப்பாய் பொருந்தி விட்டது.!
அப்பாவின் நீண்ட நாள் இசை நண்பரும் எங்கள் பெருமதிப்பிற்கும் உரிய மெல்லிசை மன்னர்கள் 🎻 *எம்.எஸ்.வி - டி.கே.ஆர்* அவர்கள் மெட்டமைத்து படத்தில் வந்து பெரும் வெற்றியும் பலரது பாராட்டையும் பெற்றது.
அந்த பாடலின் பெருமைகளை பற்றி *எம்.எஸ்.வி அவர்கள் தனது இசைக்கச்சேரிகள் நடக்கும் போதெல்லாம் கூறி வருவார்.!* அவர் அதை சொல்லும் போது அவரின் ஆவல் அப்பட்டமாய் தெரியும்.!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
*சிலோன் ரேடியோவின் பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியின் முதலாம் ஆண்டு நிறைவு விழாவில்* காற்றலைகளில் கானமிசைக்கும் *மெல்லிசை மன்னர்* கலந்து கொண்ட நிகழ்ச்சியின் 🎶 *ஒலித்துணுக்கு இணைக்கப்பட்டுள்ளது.!*
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
பிறகு அந்தப் படத்தை *ஹிந்தியில் மொழி மாற்றம்* செய்த போது, அதே பாடலை மொழி பெயர்க்க வேண்டும் என்று இயக்குனர் 📽 *பீம்சிங்* விரும்பியிருக்கிறார்.
ஆனால், *‘இப்படி ஒரு பாடலை கண்ணதாசனால் மட்டும் தான் எழுத முடியும். ஹிந்தியில் இதை மொழி பெயர்க்க வார்த்தைகளே இல்லை’* என்று இந்திக்கவிஞர்  *ராஜேந்திர கிருஷ்ணன்* வியந்து சொல்லிவிட்டாராம். இந்திப் பதிப்பில் அந்தப் பாட்டே இடம் பெறவில்லை.!
*பாடல் வரிகள்:*
°°°°°°°°°°°°°°°°°°°°°°
🎶 *அத்தான் என்னத்தான்*
அவர் என்னைத்தான்
எப்படிச் சொல்வேனடி
அவர் கையைத்தான்
கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்
எப்படிச் சொல்வேனடி
*(அத்தான்)*
ஏனத்தான் என்னைப்
பாரத்தான் கேளத்தான்
என்று சொல்லித்தான்
சென்ற பெண்ணைத் தான்
கண்டு துடித்தான் அழைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படிச் சொல்வேனடி
*(அத்தான்)*
மொட்டுத்தான் கன்னி
சிட்டுத்தான் முத்துத்தான்
உடல் பட்டுத்தான் என்று
தொட்டுத்தான் கையில்
இணைத்தான் வளைத்தான்
சிரித்தான் அணைத்தான்
எப்படிச் சொல்வேனடி
*(அத்தான்)*
 🔹 🌺  🌺 🔹 
*"கவியரசு கண்ணதாசன்" இந்த காவியப்பாடலை எழுத தூண்டு கோலாக இருந்த பாடல்.!*
*நூல்:* தனிப்பாடல்
*பாடியவர்:*
இராமச்சந்திரக் கவிராயர்
*கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?*
இல்லைத்தான் பொன்னைத்தான் எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?
அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும் பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் புவியில்தான் பண்ணினானே!
*சூழல்:* வறுமையில் வாடும் ஒரு புலவர். தன்னுடைய நிலைமையை எண்ணி வருந்திப் பாடுகிறார்
தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா, என்னைப் படைத்த போதே கையில் கொஞ்சம் தங்கத்தைக் கொடுத்து காப்பாற்றி இருக்கவேண்டும்,!
இல்லாவிட்டால், கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லி தந்திருக்கவேண்டும்.
அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் படுகின்ற துன்பத்தை எங்கே சொல்லி நோவது..?
இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கை ஆகிவிட்டதே..!
உரையை விடப் பாட்டுதான் நன்றாக இருகிறது. இல்லையா?
அதனால் தான், 🕺 *சிவாஜி கணேசன்* முதன்முதலில் நடித்த 🎬 *’பராசக்தி’* 1952 திரைப்படத்தில் அவர் பைத்தியக்காரனாக நடித்த காட்சியில் இந்தப் பாடலின் முதல் இரண்டு வரிகள்
*கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?*
அழகான வசனமாக  *'கலைஞர் கருணாநிதி*' அவர்களால் பயன்படுத்தப்பட்டது.!
 🎶  🎶  🎶 
 *இராமசந்திர கவிராயர்* தனது மற்றொரு பாடலில் இப்படி அடுக்கு மொழியில் பாடியிருந்த பாடலும் எப்போதோ படித்திருந்ததும் நினைவுக்கு வருகிறது.!
*புல்லுக் கட்டும்* விறகும்
சுமந்தபேர் பூர்வ காலத்துப்
புண்ணிய வசத்தினால்
*நெல்லுக் கட்டும்* பணக் கட்டும்
கண்டபின் நீலக்கல்லில்
கடுக்கனும் போடுவார்
*சொல்லுக் கட்டும்* புலவரைக்
கண்டக் காற்றூறிப் பாய்ந்து
கதவை அடைத்து எதிர்
*மல்லுக் கட்டும்* மடையரைப்
பாடவோ மலைச் சாரலில்
வாழ் பெரியம்மையே...
 🎶  🎶  🎶 
புல்லுக் கட்டு, நெல்லுக் கட்டு, பணக்கட்டு, சொல்லுக் கட்டு, மல்லுக்கட்டு என்று சொற்களை அடுக்கிச் செல்வது இவரது தமிழ்நடைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
🌺 *இனிய மதிய வணக்கம்* 🌺

No comments:

Post a Comment