Monday 29 October 2018

கவியரசு WhatsApp 29.10.2018

கவியரசு WhatsApp
29.10.2010.
கவி:10. அரசு:79.
✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻✍🏻
இன்று உலக பக்கவாத தினம்.
இது மனிதனுக்கு உண்டாகும் நோய்களில் ஆபத்தானது. ரத்த நாளங்களில் அடைப்பு உண்டாகி, மூளையின் பாகங்கள் செயல் இழப்பதைதான் பக்கவாதம் என்கிறார்கள். எந்தவித முன் அறிகுறியும் இல்லாமல் வரக்கூடிய ஆபத்தான நோய் இது. அதனால்தான் இதை ஆங்கிலத்தில் ஸ்ட்ரோக் என்பார்கள். மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத் தடை, ரத்தக் கசிவு போன்ற காரணங்களால் பக்கவாதம் ஏற்படுகிறது. இதனால் உடலின் பாகங்கள் செயல்பாட்டை இழந்து அசைவின்றி போய்விடுகிறது. அதிக அளவு ரத்த அழுத்தம், தேவையற்ற கொழுப்பு பொருள்கள் உடலில் தேங்குவது போன்றவை தான் பக்கவாதம் வர துணை புரிகிறது.
இன்றைய தினத்தில் நம் மனதில் நினைவில் நின்ற கவியரசரின் பாடல் ஒன்று.
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ..
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ...
மாற்றம் காண்பதுண்டோ
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ..
கால்கள் இல்லாமல் வெண்மதி வானில்
தவழ்ந்து வரவில்லையா..
இரு கைகள் இல்லாமல் மலர்களை அணைத்து
காதல் தரவில்லையா...
காதல் தரவில்லையா
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
காலம் பகைத்தாலும் கணவர் பணி செய்து
காதல் உறவாடுவேன்..
உயர் மானம் பெரிதென்று வாழும் குல மாதர்
வாழ்வின் சுவை கூறுவேன்
வாழ்வின் சுவை கூறுவேன்..
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
குறைவதுண்டோ..
படம்: தங்கமலை ரகசியம்
பாடல் : கவியரசர்.
🚺🚺🚺🚺🚺
🙏🏿..கண்ணன்சேகர்.

No comments:

Post a Comment