Wednesday 24 October 2018

திரை உலக மாமனிதர்கள்

#திரை #உலக #மாமனிதர்கள்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
1. பாதை தெரியு து பார் என்ற ஒரு படம்.இசை எம்.பி. சீனிவாசன் . படத்திற்கு பாடல் எழுத கவிஞர் ஒரு வர் சென்று பாடல் எழுதி கொடுக் கி றார். பாடலைப் படித்துப் பார்த்து பாடல் சரியில்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
சுமார் நான்கு வரு டங்களுக்கு பின் மீண்டும் வேறு ஒரு படத்திற்கு பாடல் தேவைப் பட்ட போது இதே பாடலை கொடுக் க பாடல் படத்தில் இடம் பெற்று இமாலய வெற்றி பெற்றது. அந்த கவிஞர் வாலி, மீண்டும் இடம் பெற்ற படம் படகோட்டி.
பாடல் -
"கொடுத்ததெல்லாம்கொடுத்தான் "
2." புருஷன் வீட் டில் வாழப்போகும் பொண்ணே ! தங்கச்சிகண்ணே ! "
- அண்ணன் , தங் கைக்கு அறிவுரை சொல்லும் பாச மிகு பாடல்," பானை பிடித்த வள் பாக்கியசாலி " படத்தில்.
திருச்சி லோக நாதன் பாடிய இந்த பாடல் அவருக்கு பெரும் புகழைத் தந்தது. .
இதே திருச்சி லோகநாதனை
இதே படத்தில் இன் னொரு பாட லான
"சோலைக்குள்ளே குயிலுக் குஞ்சு சும்மாசும்மாகூவுது "என்கிற பாட லை பி சுசீலாவு டன் இணைந்து பாட மறுத்து விட்டார் !காரணம் கேட்டபோது அவர் சொன்ன பதில் :
" தங்கைக்கு அண் ணன் அறிவுரை கூறும் என் குர லை அண்ணன் டி.எஸ்.துரைராஜ் அவர்களுக்கு பாடிவிட்டு,அதே படத்தில் அந்த தங்கையின் காத லன் நடிகர் பாலா ஜிக்கு குரல் கொ டு த்தால் அது தவறு, எனவே இந்த பாடலை வேறுபாடகரை வைத்து பின்ன ணி பாடவைத்துக் கொள்ளுங்கள் ! "
என்றாராம் !பிறகு படத்தில் காதல னுக்குகுரல்கொடு த்தவர் : சீர்காழி கோவிந்த ராஜன் !
3. " பதி பக்தி " - இந்த படத்தில் முதலில் அனைத் துப் பாடல்களை எழுத ஒப்பந்தம் ஆனவர் : கவிஞர் மருத காசி !
ஆனால் படத்தின் கதை சூழலைக் கேட்ட மருத காசி என்ன சொன் னா ர் தெரியுமா ?
" இந்த ' பதி பக்தி ' படக் கதைக்கு பாடல்களை எழுத பொருத்தமானவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் தான் பொருத்த மானவர், எனவே அவரையே பாடல் களை எழுதச் சொல்லுங்கள் ! "
என்று.
ஆம், ' பதி பக்தி ' படத்தின் அனைத் துப் பாடல்களை யும்' பாட்டுக் கோட் டையார்' தான் எழுதினார் !
4." மன்னாதி மன் னன் " - இந்த படம் ,கவிஞர் கண்ணதாசன் கதை வசனம் பாடல்கள் அனை த்தையும் எழுதிய படம்.அவர் நினை த்திருந்தால் இந்த படத்தில் இடம் பெற்ற அனைத் துப் பாடல்களை யும் அவரே எழுதி இருக்கலாம்.
ஆனால் , இந்த படத்தில் இடம் பெற்ற எம்ஜிஆர் - பத்மினி போட்டி நடனப் பாடலை தான் எழுதுவதை விட கவிஞர் மருத காசியை விட்டு எழுதினால் அந்த பாடல் எடுபடும் என்று கண்ணதா சன்எண்ணினார். பிறகு" ஆடாத மன மும் உண்டோ ! "
டி எம் எஸ் - எம் எல் வசந்தகுமாரி இணைந்து பாடிய ஒரே 'டூயட்' பாட லை எழுதியவர் : கவிஞர்மருதகாசி தான் !
5."பாகப் பிரிவி னை " திரைப் படம் :நடிகர் தில கம் நடித்தது. இந்த படத்தில் ஒரு சோகமான தாலாட்டுப் பாட் டை படத்தில் நடி கர் திலகம் பாட வேண்டும்.பாட்டு க்கோட்டையாரை அணுகினார்இயக் குனர் ஏ . பீம்சிங். பட்டுக்கோட்டையார் அவரிடம் என்னசொன்னார் தெரியுமா !
" தாலாட்டுப் பா டல் - அதுவும் சோ கமான தாலாட்டுப் பாடல் தாலாட்டுப் பாடலுக்கு கவி ஞர் கண்ணதா சன் தான் தகுதி யானவர் ! எனவே இந்த பாடலை எழுத அவரையே கூப்பிட்டுக கொள் ளுங்கள் ! "
என்றாராம் !
இந்த காலத்தில் இது மாதிரி நடக் கு மா ? அப்படி கண்ணதாசன் எழுதிய பாடல் தான் :" ஏன் பிறந் தாய் மகனே, ஏன் பிறந்தாய் ! "
6. சிங்கார வேல னே , தேவா ! "
இந்த பாடலை நம்மால் மறக்க முடியுமா, காருக் குறிச்சி அருணா சலத்தின் இனிய நாதஸ்வர இசை யுடன் " கொஞ்சம் சலங்கை " படப் பாடல் !
இந்த பாடலை முதலில் பிரபல இந்தித்திரைப்பட பாடகி :லதா மங் கேஷ்கரை வைத் து பாட முடிவு செய்தார் எஸ் . எம் . எஸ் .
கொஞ்சும் சலங் கை இசையமை ப் பாளர் எஸ். எம். சுப்பையா நாயுடு . பாடலின் சுதியை க் கேட்ட இந்தி இசைக்குயில் லதா" ஹம்கோயே கானா பஹுத் முஷ்கில் ஹை ! "(எனக்கு இந்த பாடலைப் பாடு வது மிகவும் கடினம்)கை விரித்து விட்டார்.
பின்னர் எஸ் .எம் . எஸ் பிரபல பாடகி பி லீலாவை வைத் து பாட முடிவு செய்து அவரிடம் சொன்ன போது பி. லீலா என்ன சொன்னார் தெரியுமா ?
" இந்த பாடலைப் பாடுவதற்கு முற் றிலும் தகுதியான வர் ,எஸ். ஜானகி தான் ! எனவே அவரையே நீங்கள்வரவழைத்
துபாடவைச்சி
ருங்க ! "
இப்போதெல்லாம் இது மாதிரி நடக் குமா ?
7. பிரபல வீணை வித்வான்எஸ்.
பாலசந்தர் படங்க ளில் பாடுவதிலும் திறமை உள்ளவர். அவர் பல படங்க ளில் அவர்நடிப்புக் கு அவரே பாடியுள் ளார். ( ' இது நிஜ மா' , 'கைதி போன் ற படங்களில் பாடி உள்ளார்)ஆனால் , அவர் நடிகர் ஜெமினி கணேச னுடன் இணைந்து நடித்த " பெண் " படத்தில் இடம் பெற்றகல்யாணம் ...வேண்டும் வாழ் விலேகல்யாணம் ! "என்கிற பாடலை அவர் நினைத் தா ல் அவரே பாடி இருக்கமுடியும் , ஆனால் அந்தபாட லின் அழகுக் காக தானே பாடாமல் , பிரபல நடிகர் ஜே. பி .சந்திரபாபுவை வைத்துபாடவைத் தார் ! சந்திரபாபு பாடுவதற்கு முன் னர் இந்த பாடலை இசையமைப்பா
ளர்ஆர். சுதர்சனம் முதலில் பாட வைத்த பாடகர் :
டி எம் எஸ்
8." திருடாதே " படம், இசை எஸ் எம் சுப்பையா நாயுடு .இந்த படத் தில் ஓர் அழகான 'டூயட்' பாடல்.
" என் அருகே நீ இருந்தால் இயற் கையெல்லாம் சுழலுவதேன் ! "
பி பி எஸ் - சுசீலா பாடிய இந்த பாட லை இசையமை த்தவர் எஸ் எம் சுப்பய்யா நாயுடு இல்லை .படத்தின்
இசையமைப்பாளர் எஸ் எம். சுப்பை யா நாயுடு தான். ஆனால் இந்த பாட லுக்கு இசை மெல்லிசை மன் னர்கள் !இந்த விஷயத்தை யாரும் , ஏன் மெல் லிசைமன்னர்களே பெருந்தன் மையோடு வெளி யேசொன்னதில்லை.
9. " மரகதம் " - இந்த பெயரில் நடிகர் திலகம் நடித்த படம். இந்த படத்தின் இசை : எஸ் எம் சுப்பையா நாயுடு.
இந்த படத்தில் இருந்து ஒரு புகழ் பெற்ற பாடல் :
" குங்குமப் பூவே, கொஞ்சும் புறா வே, கண்மணி உன்னை கண்ட தும்இன்பம்பொங் குது தன்னாலே ! "
ஜே பி சந்திரபாபு வுடன் கே ஜமுனா ராணி பாடும் இந்த பாடலை அதே நடிகர் தில கம் நடித்த " சபாஷ் மீனா " படத்திற்காக பிரபல இசைய மை ப்பாளர் டி .சலபதி ராவ் இசையமைத்து வைத்திருந்தார் .
இந்த பாடலை சந்திரபாபு' மரகதம் "படத்திற் காக எஸ்.எம் .எஸ் ஸிடம் கொடுத்து பாடினாராம் !
இது பற்றி சலபதி ராவ் ஒரு சொல் கூட யாரையும் திட்டிப் பேசவில் லை !தனது பாடல் ஏதோ ஒரு படத் தில் 'ஹிட்'ஆனால் போதும் என்கிற
நல்ல எண்ணம் தான் அவருக்கு !
10. "கூண்டுக்கிளி " - நடிகர் திலக மும்,மக்கள் திலக மும் இணைந்து நடித்த ஒரே படம் ! இந்த படத்தின் இசை கே. வி . மகாதேவன்.
இந்த படத்தில் மகாதேவன் ஒரே ஒரு 'டூயட்' பாட லை இசையமை த்தார்.
அந்த பாடலைக் கேட்டதும் பட நாய கர்கள் இருவரும்" இந்த 'டூயட்' பாட்டு படத்தில் எனக்கா க பாடி படமாக்க வேண்டும் ! "
என்று இருவரும் ' கூற கூண்டுக் கிளி ' இயக்குனர் டி . ஆர்.ராமண் ணா !பாடலை நீக்கி விட்டார் !
ராமண்ணாவின் அடுத்த படம் :
குலேபகாவலி' . இந்த படத்திற்கா க இந்த பாடலை எம்ஜிஆர் - ஜி. வரலட்சுமி டூயட் பாடலாக பயன் படுத்திக்கொண்டார்.அந்த பாடல் தான் : மயக்கும் மாலை பொழுதே போ போ !இனிக் கும் இன்ப இரவே வா வா! "
" குலேபகாவலி ' படத்தின் இசை மெல்லிசைமன்ன ர்கள் !
11. . ' எதிர் நீச்சல் ' ( 1968 ) - நாகே ஷ் நடித்து பாலச் சந்தர் இயக்கிய படம். இசை வி. குமார் !இந்த படத்தில் இருந்து ஒரு பாடல் :
" என்னம்மா பொன்னம்மா பக்கம் வா வா வா வா ! "
நாகேஷ், நாடகம் ஒன்றுக்கு பாடும் பாட்டு ! டி எம் எஸ் - சுசீலா பாடியது !
ஆனால் இந்த பாட லுக்கு இசை : வி . குமார் அல்ல !பின் யார் ?மெல் லிசைமன்னர்கள் 12.மலைக்கள்ளன் படத்திற்கு ஒரு தத்துவப் பாடல் தேவைப்பட்டது.
தஞ்சை ராமய்யா தாஸ் பாடலாசிரி யர்.பாடலின் பல் லவி எழுதிமுடித்து விட்டார். இதற்கி டையே இயக்குநர் ஸ்ரீராமுலு நாயுடு வுக்கும் தஞ்சைரா மய்யாதாஸுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மீதிப் பாடலை எழு தமறுத்துவிட்டார்.நாயகன் எம் ஜி ஆர் சமாதானப் படுத்தியும் எழுத மறுத்ததால் மீதி சரணத்தைகோவை அய்யா முத்துப் புலவர் எழுதி முடித்தார். அந்தப் பாடல் தான்
"எத்தனை காலம் தான்ஏமாற்றுவார் இந்த நாட்டிலே"
13. முருகன் பக்தி ப் பாடல் ஒன்று குன்னக்குடிவைத் தியநாதன் இசை ய மைத்து தனிப் பாடலாக பிரபலம டைந்திருந்தது. பாடலில் சொக்கி ப் போன ஏ.பி.நாக ராஜன் தனது கந்தன் கருணை படத்திற்காக பாட லை உபயோகிக்க முடிவு செய்தார்.
குன்னக்குடிவைத் தியநாதனிடம் பேசி அந்த ஒரு பாடலை மட்டும் கந்தன் கருணை படத்தில் இடம் பெறச் செய்தார். இந்த படத்தின் மற்ற பாடல்க ளுக்கு இசைய மை ப்பாளர் கே.வி.மகாதேவன். ஆனால் இந்த ஒரு பாடல் மட்டும் குன்னக்குடி வைத்தியநாதன். அந்த பாடல்
"திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தாய் முருகா"
14.ஒரு பாடல் என்பது அப்போ தெல்லாம் படம் வெளிவந்து சில நாட்களுக்குபிறகு தான் பிரபல மா கும். இப்போது போல படம் வெளி வருவதற்கு ஒரு வருடம் முன்பே பாடல்கள் ரிலீஸ் செய்வதில்லை. ஆனால் வீரத் திருமகன் என்ற படத்தின் ஒரு பாடல் காட்சி படமாக்கப்படும் போதே வேடிக்கை பார்த்த ரசிகர்க ளால் பெரும் வரவேற்பைப் பெற்று, அதே போல் படம் வெளி வந்த பின்னும் மாபெரும் வெற்றி பெற்றது. அந்தப் பாடல்
"ரோஜா மலரே ராஜகுமாரி"
நன்றி ராமமூர்த்தி டி ஜி

No comments:

Post a Comment