Saturday 27 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீீ)

😊😊🌹😊😊
*சிந்தனைக்கு! !!!!*
👇👇
*அங்கீகாரம்*
*கற்றுக்கொள்ள வேண்டியது நாம்தான்*😳🤔😟🙏
பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு...
குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு தெரிஞ்சிக்க ஆசைப்பட்டு தன குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு...
சரி சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... ன்னு சொல்லி அத்தோட நிறுத்திகிச்சு.
அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... அப்பவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாவுக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சரியா சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க..
அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது..
நீங்க சொல்லிக் கொடுக்கலையான்னு கேட்டாங்க..
அதுக்கு அவர் சொன்னார்
இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...
குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்...
குழந்தை ஒன்னு சொல்லுச்சு,
அப்போ ஆசிரியர் ம்ம்..
அப்படினார்.
குழந்தை ரெண்டு சொல்லுச்சு,
ஆசிரியர் ம்ம் அப்படின்னார்.
குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்..
குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு...அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு...
அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்துக் கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்...
ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன அங்கீகாரத்தை கொடுத்திருக்கணும்...
இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும்.
மனிதர்களுக்கு தேவை அங்கீகாரம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.
ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான அங்கீகாரம் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கும் நாம் அங்கீகாரம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது...
எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்..!
*நட்புடன்! !!!!!!*
😊😊🌹😊😊

No comments:

Post a Comment