Saturday 20 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

இன்றைய சிந்தனைக்கு.(22).
இனிய காலை வணக்கம்.
வாழ்வில் அவரவர் உயரம் அவரவர் அறிந்து கொண்டால் நன்மைகள் அடைவது நிரந்தரம்.அடுத்தவர் உயரம் அளந்து கொண்டே அவரை பொது வெளியில் விமர்சனம் செய்து வந்தால் என்றோ ஒருநாள் பெருத்த அவமானம் அடைவது நிதர்சனம்.ஆம்!இயற்கையாக முளைத்திடும் பனைமரங்கள் உயரம் அதற்குத் தெரியாது.ஆனால் நாம் உய்த்துணர்வு இல்லாத பனை மரம் அல்ல.ஆறறிவு படைத்த நமக்கு நமது உயரம் என்ன என்று தெரியும்.ஆகவே அடுத்தவர்களைப் பற்றி விமர்சனம் செய்து கொண்டு சொந்த வாழ்க்கையை இழக்க வேண்டாம்.நம் உயரம் தெரிந்து குறுக்கு வழியைப் பற்றி சிந்திக்காமால்,நேர் வழியில் உழைப்போம்.வாழ்வில் எல்லா வளங்களையும்,நலன்களையும் பெற்று உயர்வடைவோம்டாக்டர் கோவை கிருஷ்ணா.

No comments:

Post a Comment