Wednesday 24 October 2018

கவியரசு WhatsApp 24.10.2018.

கவியரசு WhatsApp
24.10.2018.

இன்று உலக இளம்பிள்ளை வாத எதிர்ப்பு தினம்
💤💤💤💤💤💤
இளம்பிள்ளை வாதம் பாதிக்கப்பட்டவரின் மலத்தின் வழியாகப் பரவும் தீநுண்மத் தொற்றுநோய் ஆகும். மலத் துகள்களினால் மாசடைந்த நீர், அல்லது உணவு வாய்வழியாக உட்கொள்ளப்படும் போது இந்நோய் தொற்றுகிறது. இது போலியோ என்னும் ஆங்கிலப் பெயராலும் பரவலாக அழைக்கப்படுகின்றது.போலியோமியெலிட்டிஸ் (Poliomyelitis)என்பது இந்நோயின் மருத்துவப் பெயர்.போலியோமைலிட்டிஸ் வைரஸ் தண்டுவடத்தைத் தாக்கும்போது ஏற்படும் பக்கவாதம் இது.
🚼🚼🚼🚼🚼
கவியரசரின் பாடல் ஒன்று.
🚶🏾‍♀🚶🏾‍♀🚶🏾‍♀🚶🏾‍♀🚶🏾‍♀
அல்லி தண்டு காலெடுத்து
அடிமேல் அடி எடுத்து... சின்னக் கண்ணன் நடக்கையிலே... சித்திரங்கள் என்ன செய்யும்?
பொல்லாத சிரிப்பும் பொன்மேனி சிவப்பும் சொல்லாத கவிதைகள் சொல்லும்...
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
பொல்லாத சிரிப்பும் பொன்மேனி சிவப்பும்
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
சொல்லாத கவிதைகள் சொல்லும்...
முத்து நவ இரத்தினங்களை அவன் மோகன புன்னகை வெல்லும். முத்து நவ இரத்தினங்களை அவன் மோகன புன்னகை வெல்லும்.
அல்லி தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து... சின்னக் கண்ணன் நடக்கையிலே... சித்திரங்கள் என்ன செய்யும்?
நீரோடை போலே நீயோடும் வேளை ஊராரின் கண்படலாமோ?? ஊராரின் கண்படலாமோ?? நீரோடை போலே நீயோடும் வேளை ஊராரின் கண்படலாமோ?? ஊராரின் கண்படலாமோ??
அள்ளி அள்ளி எடுக்கையிலே. என் அத்தானை மறந்திருப்போமோ! அள்ளி அள்ளி எடுக்கையிலே. என் அத்தானை மறந்திருப்போமோ!
அல்லி தண்டு காலெடுத்து அடிமேல் அடி எடுத்து... சின்னக் கண்ணன் நடக்கையிலே... சித்திரங்கள் செய்யும்..
படம் : காக்கும் கரங்கள்
பாடல் : கவியரசர்.
🙏🏿...முடன்
கண்ணன் சேகர்.

No comments:

Post a Comment