Monday 22 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

ஐஸ் ஹவுஸ்....
இன்று வீட்டுக்கு வீடு குளிர்சானப் பெட்டியில் ஐஸ் தயாரித்துக் கொள்கிறோம்; வீதிக்கு வீதி ஐஸ்கிரீம் கடைகளும் இருக்கிறன.175 வருடங்களுக்கு முன்,ஒரு சாதாரண ஐஸ் கட்டி வாங்கவேண்டும் என்றால், அவர் டாக்டர் சர்ட்டிஃபிகேட் வாங்கிக்கொண்டு செல்லவேண்டும். காரணம் ஐஸ் கட்டி அவ்வளவு எளிதாக கிடைக்காது.மருத்தவர்களுக்கும்,பிரபுக்களுக்கும் மட்டுமே ஐஸ் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.அதுவும் அமெரிக்காவில் இருந்து இறக்குமதியான ஐஸ்.
அமெரிக்காவின் போஸ்டன் நகரில் இயற்கையாக உருவான பனிக் கட்டிகளை வெட்டி எடுத்து, கல்கத்தாவுக்கு ஐஸ்கட்டிகள் வந்து இறங்கிய செப்டம்பர் 14-ம் தேதி,1833-ல் தொடங்குகிறது.
இந்திய கோடையின் வெப்பத்தில் தகித்துப் போயிருந்த வெள்ளையர்களுக்கு,அந்த ஐஸ்கட்டிகள் கடவுள் கொடுத்த அரிய பரிசைப் போல் இருந்துள்ளது.
ஐஸ்கட்டி இறக்குமதி,அந்த காலத்தில் கல்கத்தா நகரில் பரபரப்பாகப் பேசப்பட்டது.அது எப்படி இருக்கும்?அதை எப்படி பாதுகாப்பாக வைத்துக்கொள்வது?அதை எப்படி பயன் படுத்துவது?ஐஸ் கட்டியை மண்ணில் முளைக்கவைத்தால்,ஐஸ் மரம் வருமா என்றெல்லாம் மக்கள் கேள்வி கேட்டுள்ளார்கள்.
மதராஸுக்கு அதன் விற்பனையை தொடங்கியபோது,1842-ம் ஆண்டு ஐஸ் சேமிப்பு கிடங்காக கட்டப்பட்டதுதான், ஐஸ் ஹவுஸ் கட்டடம்.(இன்றைய விவேகானந்தர் இல்லம்.)
ஐஸ்ஹவுஸ் கட்டடம் அன்று கடல் அருகே இருந்துள்ளது.காலப்போக்கில் கடல் உள்வாங்கியதால்,இது கடலில் இருந்து இன்று தள்ளி இருக்கிறது.
அந்த நாட்களி்ல்,இந்தக் கட்டிடத்தில் ஒரு கண்ணாடிப் பெட்டி ஒன்றில்,மக்கள் பார்த்து மகிழ்வதற்காக பெரிய ஐஸ் கட்டி ஒன்று வைக்கப்பட்டு இருக்குமாம்.
மருத்துவ காரணம் காட்டி ஐஸ் கட்டி வாங்கி,சொந்த உபயோகம் செய்து ஏமாற்றியதாக ஒருவர்மீது புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.
நன்றி ராஜப்பா தஞ்சை

No comments:

Post a Comment