Saturday 20 October 2018

கவியரசு WhatsApp 20.10.2010.

கவியரசு WhatsApp
20.10.2010.
💥இன்று இயக்குனர் ஸ்ரீதர் நினைவு நாள்-2008.
🎥 இயக்குனர் ஸ்ரீதர் இயக்கிய முதல் படமான கல்யாணப்பரிசு ஜெமினி கணேசன், சரோஜா தேவி மற்றும் விஜயகுமாரி ஆகியோரின் நடிப்பில் 1957ஆம் ஆண்டு வெளியானது. வீனஸ் பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்திற்காக ஸ்ரீதர் இயக்கிய இத்திரைப்படம், சரோஜாதேவி கதாநாயகியாக முதலில் அறிமுகமான படம் என்பதும், அதுவரை பாடகராக மட்டுமே தமிழில் அறியப்பட்டிருந்த ஏ.எம். ராஜா ஒரு இசை அமைப்பாளராகவும் அறிமுகமான படம் இது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் பாடல்களான "காதலிலே தோல்வியுற்றான்" போன்ற பாடல்கள் பெரும்புகழை ஈட்டின.
📻ஸ்ரீதர் இயக்கத்தில் வெளியான படத்தில் இடம்பெற்ற கவியரசரின் பாடல் ஒன்று.
📀நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
நெஞ்சம் மறப்பதில்லை
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
காலங்கள் தோறும் உன் மடி தேடி
கலங்கும் என் மனமே
வரும் காற்றினிலும்
பெரும் கனவிலும்
நான் காண்பது உன் முகமே
நான் காண்பது உன் முகமே
நெஞ்சம் மறப்பதில்லை...
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
தாமரை மலரில் மனதினை எடுத்து
தனியே வைத்திருந்தேன்
ஒரு பூவும் இல்லை உன் தோற்றமில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
கண்ணில் தூக்கம் பிடிக்கவில்லை
நெஞ்சம் மறப்பதில்லை
அது நினைவை இழக்கவில்லை
நான் காத்திருந்தேன்
உன்னை பார்த்திருந்தேன்
கண்களும் மூடவில்லை
என் கண்களூம் மூடவில்லை
படம்: நெஞ்சம் மறப்பதில்லை

No comments:

Post a Comment