Wednesday 24 October 2018

கவியரசு WhatsApp 23.10.2018

கவியரசு WhatsApp
23.10.2018

இன்று எம். எஸ். சுப்புலட்சுமியின் இசைக் கச்சேரி ஐ,நா சபையில் நடைப்பெற்ற தினம் - 1966.
மதுரையை சேர்ந்த சுப்புலட்சுமி புகழ்பெற்றகருநாடக இசைப் பாடகியாவார். 1998ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தமிழ்,கன்னடம், மலையாளம, தெலுங்கு,வங்காள மொழி, இந்தி, சமஸ்கிருதம்,குஜராத்தி ஆகிய பல மொழிகளில் இவர் பாடியுள்ளார். இவர் உலகின் பல நாடுகளுக்கும் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். மேலும் ஐக்கிய நாடுகள் அவையிலும் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார்.
🖋🖋🖋🖋🖋🖋🖋
கவியரசரின் பாடல் ஒன்று.
படம் : தவப்புதல்வன்
பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன்
இயற்றியவர் : கவியரசு கண்ணதாசன்.
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்..
அது இறைவன் அருளாகும்...
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்...
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும்..
இசை என்னிடம் உருவாகும்..
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்..
அது இறைவன் அருளாகும்...
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்..
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்..
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம்..
என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்..
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்..
என் மேன்மை இறைவா உன் அருளாகலாம்..
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்..
எரியாத தீபத்தில் ஒளி வேண்டினேன்..
ஏழாம் கடலும் வானும் நிலமும்
என்னுடன் விளையாடும் - இசை
என்னிடம் உருவாகும்..
இசை என்னிடம் உருவாகும்..
விதியோடு விளையாடும் ராகங்களே..
விளக்கேற்றி உயிர் காக்க வாருங்களே..
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கனலேந்தி வாருங்கள் தீபங்களே..
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே..
கரைந்தோடும் நோயென்னும் பாவங்களே..
கத்துங்கடலலை ஓடி ஓடி வரும்..
உந்தன் இசையுடன் ஆடி ஆடி வரும் தீபங்களே..
எந்தன் இசையுடன் பாடல் கேட்ட பின்னும்..
இன்னும் வரவில்லை செய்த பாவமென்ன? தீபங்களே..
கண்ணில் கனல் வரப் பாட வேண்டுமெனில்
மின்னும் ஒளியுடன் நூறு பாடல் வரும் தீபங்களே..
தீபங்களே..தீபங்களே.. தீபங்களே.. தீபங்களே..
இசைக் கேட்டால் புவி அசைந்தாடும்..
அது இறைவன் அருளாகும்..

No comments:

Post a Comment