Wednesday 24 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

திரைப்படப் பாடல்களில் இலக்கியம் தந்த கண்ணதாசன்.....
கண்ணதாசன் பாடல்களின் சிறப்பு! எம்.ஜி.ஆர்.பாராட்டு!
கண்ணதாசன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும்வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் சர்வகட்சித் தலைவர்கள் (தி.மு.கழகம் நீங்கலாக) கலந்துகொண்ட இரங்கல் கூட்டம் 24.10.1981 அன்றுநடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்ட இலங்கைஅமைச்சராக அன்று பதவி வகித்த ராஜதுரை உரையாற்றம்போது,
“கண்ணதாசன் எழுதிய பாடலைத் தவிர வேறு யார் எழுதிய பாடலையும் இரண்டாவது முறைகேட்க முடியாது என்று முதல்வர் எம்.ஜி.ஆர். ஒருமுறைபாராட்டிக் கூறினார். முதல்வருக்கும்,கண்ணதாசனுக்கும் இடையே ஒரு இடைவெளி இருந்தநேரத்தில் இதனைக் குறிப்பிட்டார்!” என்று கூறினார்.
இரங்கல் கூட்டத்தில் உரையாற்றிய தமிழகத்தின் அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர். ‘அச்சம் என்பதுமடமையடா!’ பாடலை டேப்பில் இருந்து ஒலிக்கச்செய்தார்.
பின்னர் பேசும்போது,
“இந்தப் பாட்டின் மூலம் தன்னம்பிக்கையை ஊட்டுவதுடன் பொதுவுடமைக் கொள்கையை எளிமையாக எடுத்துச் சொல்லி இருக்கிறார். மூடநம்பிக்கையைச் சாடியிருக்கிறார். இலக்கியத்தால் இதை எல்லா மக்களின் மனதிலும் பதியவைக்கமுடியாது. சினிமா மூலந்தான் இதை எல்லா மக்களுக்கும் எடுத்துச் சொல்லமுடியும். இதற்கு,சினிமாவைவிடச் சிறந்த சாதனம் கிடையாது.
சாதாரண மக்களும் இலக்கியத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் பாடல்களைப் படைத்தவர் கண்ணதாசன்.

No comments:

Post a Comment