Friday 26 October 2018

கவியரசு WhatsApp 25.10.2010.

கவியரசு WhatsApp
25.10.2010.
கவி:10. அரசு: 70.
📒📒📒📒📒
இன்று இந்தியாவில் பொடா சட்டம் அமல் படுத்திய தினம்- 2001.
🤺🤺🤺🤺🤺
தீவிரவாதத்தை ஒடுக்க வந்தது பொடோ சட்டம்
என்ற புதிய அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
இந்தியாவில் தீவிரவாத செயல்களிலும், வன்முறை செயல்களிலும் ஈடுபடுவோரைஒடுக்க தடா சட்டம் அமலில் இருந்து வந்தது. அந்த சட்டம் தற்போது அமலில் இல்லை.இதையடுத்து மத்திய அரசு பொடோ என்ற புதிய அவசர சட்டத்தை கொண்டுவந்துள்ளது.
தீவிரவாதிகளிடமிருந்தும், தீவிரவாத செயல்களிலிருந்தும் மக்களை காப்பதே இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம். அதை கருத்தில் கொண்டே இந்த சட்டம் 2001ல் இயற்றப்பட்டது.
👹👹👹👹👹
📀கவியரசரின் பாடல் ஒன்று பார்ப்போம்.
என்ன தான் நடக்கும்
நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே
தன்னாலே வெளிவரும் தயங்காதே
தலைவன் இருக்கிறான் மயங்காதே
பின்னாலே தெரிவது அடிச்சுவடு
முன்னாலே இருப்பது
அவன் வீடு
நடுவினிலே நீ
விளையாடு
நல்லதை நினைத்தே போராடு...
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..
உலகத்தில் திருடர்கள்
சரி பாதி
ஊமைகள் குருடர்கள்
அதில் பாதி
கலகத்தில் பிறப்பது
தான் நீதி
மனம் கலங்காதே
மதி மயங்காதே..
என்ன தான் நடக்கும்
நடக்கட்டுமே..
மனதுக்கு மட்டும்
பயந்துவிடு
மானத்தை உடலில்
கலந்துவிடு
இருக்கிற வரையில்
வாழ்ந்துவிடு
இரண்டினில் ஒன்று
பார்த்துவிடு
என்ன தான் நடக்கும்
நடக்கட்டுமே
இருட்டினில் நீதி
மறையட்டுமே
படம் : குடும்பத்தலைவன்
பாடல் : கவியரசர்.
👍👍👍👍
#########
🙏🏿...முடன்
கண்ணன்சேகர்.

No comments:

Post a Comment