Wednesday 24 October 2018

மாதரசி, பிள்ளைகளின் நலம் காத்த மகராசி....

மாதரசி, பிள்ளைகளின் நலம் காத்த மகராசி....
வயதோ 40,குழந்தைகள் 44...
உகாண்டா நாட்டில் கபிம்பிரி என்ற கிராமத்தை சேர்ந்தவர் மரியம் நபாடன்ஸி(40)அவரது 12-வது வயதில் அவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
13 வயதில்,முதல் பிரசவத்தில் இரட்டை குழந்தை என,தனது 18 ஆண்டுகளை பிரசவத்திலேயே செலவிட்டுள்ளார்.
இரட்டைக் குழந்தைகள்-6.
4 முறை மூன்று குழந்தைகள்.
3 முறை நான்கு குழந்தைகள்.
8 முறை தனி தனியாக குழந்தைகள் என மொத்தம் 44 குழந்தைகள்.இதில் 38 குழந்தைகள் உயிருடன் உள்ளனர்.
44-வது குழந்தை பிறந்தவுடன் தனது கர்ப்பப்பையை நீக்கிவிட்டார்.
மரியத்தின் கணவருக்கு பல மனைவிகள் உண்டு. ஆதலால், வருடத்தில் ஒரு சில தினங்கள் மட்டும் இரவில் மனைவியோடு தங்கிவிட்டு குழந்தைகள் விழிப்பதற்குள் எழுந்து சென்றுவிடுவார்.மரியத்தின் மூத்தமகனே 13 வயதில்தான் அவரது அப்பாவை பார்த்துள்ளான்.மற்ற குழந்தைகள் அவரை இன்னும் பார்த்ததில்லையாம்.
மரியம் கூறுகிறார். "பண கஷ்டம் இருந்தாலும் நான் தினம் வேலைக்கு சென்று எனது பிள்ளைகளுக்கு உணவு அளித்து வருகிறேன்.இது வரை பட்டினி இருந்ததே கிடையாது.எனது குடும்பத்தை சந்தோஷமாக கவனித்து வருகிறேன்"
மரியத்தின் அப்பாவுக்கு பல மனைவிகள் மூலம்,45 குழந்தைகள் உள்ளன.
நன்றி ராஜப்பா தஞ்சை


No comments:

Post a Comment