Wednesday 24 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீீ)

படித்தேன்... இரசித்தேன்... பகர்ந்தேன்...
*வாழ்க்கை* *என்பது* *என்ன* ?
இந்த தலைப்பையே உங்களுக்குள் ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
வாழ்க்கை என்பதுதான் என்ன..?
உயிரோடு இருப்பதா?மகிழ்ச்சியாக இருப்பதா?பணம், புகழைத் தேடி தலை தெறிக்க ஓடுவதா?
தோல்விகளில் கற்றுக் கொள்வதா? வெற்றிகளில் பெற்றுக் கொள்வதா?தன்னலமற்ற அர்ப்பணிப்பா?
இவைகளில் எது வாழ்க்கை என்று உறுதியாக கூற முடியாவிட்டாலும், பிறந்தவர் அனைவரும் வாழ்ந்தே தீர வேண்டிய கட்டாயத்தில்உள்ளோம்.
வாழ்க்கை என்பது ஓர் அனுபவம்.ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப் படுத்துகிறது., காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது.
வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லா விட்டாலும், வாழ்க்கையின் பிரச்சினைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது.
ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
அப்படி கற்றுக் கொண்டவன் வெற்றியடைகிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.
நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்க வேண்டும். வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது.
ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது.
அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது.
அப்போது வாழ்க்கை வெறுமை ஆகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.
நாம் நினைக்கும் எண்ணங்கள் உறுதியாகவும், நம்பிக்கையுடனும் இருக்க வேண்டும்.
அந்த பாசிடிவ் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளை மாற்றியமைத்து நம்மை வெற்றி பாதையில் அழைத்துக் செல்லும்.
நம் எண்ணம் ஒருநாள் செயலாகும் போதுதான் அந்த எண்ணத்தின் வலிமை புரியும்.
நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக மாறி விடுவோம்.
ஆம்.,நண்பர்களே..,
நம்மைவிட உடலில் பலசாலி யானை
நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை
நம்மைவிட உழைப்பில் சிறந்தது கழுதை.
இப்படி மிருகங்கள் நம்மைவிட பலமடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம்.
காரணம் நாம் மட்டுமே மனோபலம் கொண்டவர்கள்
நமக்கு ஏற்படுகிற பிரச்சினைகளும் அப்படித்தான்.
அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது........
நன்றி கனகசபை ராமசாமி

No comments:

Post a Comment