Wednesday 24 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

கவியரசர் WhatsApp
22.10.2018.
இன்று வெள்ளொளி மின்சார பல்பு கண்டுபிடிக்கப்பட்ட தினம்.
இன்று பல புதிய வகை விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பல கூடிய செயல்திறனும், நீடித்து உழைக்கும் தன்மையும் கொண்டவை. எனினும், வெள்ளொளிர்வு விளக்குகள் இன்னும் பிரபலமாகவே உள்ளன. இவற்றுக்கான ஆரம்பச் செலவுகள் குறைவாக இருப்பதும், வேறு சிலஒளியியல் இயல்புகளும் இதற்குக் கரணங்களாகும். இன்றும் உலகில் மிக அதிகமாகப் பயன்பாட்டிலுள்ள மின் விளக்குகள் வெள்ளொளிர் விளக்குகளே.
_---_--------------++++++++
கவியரசர் பாடல் ஒன்று.
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கண்ட நிழல் நானே
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கண்ட நிழல் நானே
முகமே நீ இட்ட திரை நானே
முள்ளும் நானே மலர் நானே... ஹோ...
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கண்ட நிழல் நானே
இசை சரணம் - 1
பூவும் காயும் வேறு வேறு
பூவே காயாகும்
பொன்னும் நகையும் வேறு வேறு
பொன்னே நகை ஆகும்
பூவும் காயும் வேறு வேறு
பூவே காயாகும்
பொன்னும் நகையும் வேறு வேறு
பொன்னே நகை ஆகும்
பூவை வெறுக்கும் பூவயர் எல்லாம்
காயை ரசிப்பாரோ
பூவை வெறுக்கும் பூவயர் எல்லாம்
காயை ரசிப்பாரோ
பொன்னை ஒதுக்கும் மாதர்கள் எல்லாம்
நகையை அணிவாரோ
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கண்ட நிழல் நானே
இசை சரணம் - 2
தொட்டில் பிள்ளை பாடல் கேட்டு
அன்னை வர வேண்டும்
துடிக்கும் நெஞ்சின் வார்த்தை கேட்டு
துணையே வர வேண்டும்
தொட்டில் பிள்ளை பாடல் கேட்டு
அன்னை வர வேண்டும்
துடிக்கும் நெஞ்சின் வார்த்தை கேட்டு
துணையே வர வேண்டும்
கணவன் முகத்தை கண்கள் காணும்
காலம் வர வேண்டும்
கணவன் முகத்தை கண்கள் காணும்
காலம் வர வேண்டும்
காணும் போது குங்குமம் எனக்கு
காவல் தர வேண்டும்
காணும் போது குங்குமம் எனக்கு
காவல் தர வேண்டும்
விளக்கே நீ கொண்ட ஒளி நானே
விழியே நீ கண்ட நிழல் நானே
முகமே நீ இட்ட திரை நானே

No comments:

Post a Comment