Monday 22 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

மதுரையின் மாண்பினை காத்திடுவோம்...
காவல் ஆணையர் வேண்டுகோள்......
*மதுரையில் நான்கு நாட்களில் நான்கு கொலை சம்பவம் நடந்ததை தொடர்ந்து மதுரை மாநகர் காவல்துறை ஆணையர் இளைஞர்களுக்கு வேண்டுகோள்*
இன்றைய சமுதாய மாற்றச் சிந்தனைகளைக் கொண்டு செல்வதில் முக்கிய ஊடகமாக இளைஞர்களே திகழ்கின்றனர். ஒரு சமுதாயத்தில் இளைஞர்கள் ௭ன்போர் மிகவும் சக்திமிக்க செல்வமாகும். அது சமுதாய மட்டும் மக்கள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டிய சக்தி. அதைவிடுத்து சில சம்பவங்களில் இன்றைய இளைஞர்கள் கொலை வழக்குகளில் முக்கிய குற்றவாளிகளாக ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த வாரத்தில் மதுரை மாநகரத்தில் நடைபெற்ற கொலைவழக்குகளில் ஈடுபட்ட 23 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும்பாலும் இளைஞர்களே முக்கிய குற்றவாளிகளாக ஈடுபட்டுள்ளனர். எனவே மதுரை மாநகர இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தாங்கள் குடியிருக்கும் பகுதிகளில், தங்களுக்கு தெரியவரும் ஏதேனும் வீண் வாக்குவாதங்கள், மோதல்கள், அடிதடிப் பிரச்சனைகள் மற்றும் பழிவாங்கும் நோக்கத்தில் திட்டமிடும் நபர்கள் மற்றும் செயல்கள் பற்றிய விவரங்களை குற்றம் நடைபெறாமல் முன்கூட்டியே தடுக்கும் பொருட்டு தங்களுக்கு தெரிந்த முக்கிய தகவல்களை உடனடியாக மதுரை மாநகர Whatsapp Complaint Number: 83000-21100 என்ற எண், அருகில் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் தங்களது வார்டு பொறுப்பு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிப்பதன் மூலம் மேற்படி குற்ற சம்பவங்களிலிருந்து இன்றைய இளைஞர்களை நல்வழிப்படுத்த நாம் அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்.
மேலும் தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், முகவரி மற்றும் கைப்பேசி எண் ரகசியம் காக்கப்படும். பிரச்சனைகள் பெரிதாகாமல் முளையிலேயே தடுக்க நாம் முயற்சி செய்யவேண்டும். உரிய தகவல்களை காவல்துறையினரோடு பகிர்ந்துகொள்ளவேண்டும் என *மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்* வேண்டுகோள் வைத்தார்

No comments:

Post a Comment