Thursday 25 October 2018

முகநூல் தகவல் (மனிதத்தேனீ)

பொறுமையும் பணிவும்....
இன்றைய சிந்தனைக்கு(28)
உயரம் உன் கையில்;நல்ல முயற்சியும்,பயிற்சி யும்,மற்றவர்களை அனுசரித்து செல்லும் மனப்பான்மையும் இருந்தால் நம் உயரம் நம் கையில்தான்!
அப்படி உயரத்திற்கு வந்தவுடன் கூட பணிவு அவசியம் வேண்டும்.
பதவி வரும் போது,பணிவு வரவேண்டும் தோழா!என்ற பாடல் வரி நோக்கத்தக்கது.
விவேகானந்தர் முதல் அப்துல் கலாம் அய்யா வரை உச்சத்திற்கு சென்றவர்களை புரட்டினால்,அவர்களது பொறுமையும்,பணிவும்தான் அவர்களால் சிகரத்தை அடைய முடிந்தது எனத் தெரியவரும்.
இதனைத்தான் வள்ளுவப் பெருந்தகை "பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்று பிற என பணிவுடமை கருத்துக்களை வலியுறுத்திச் சென்றார்.
ஒருவர் தம்முடைய வாழ்க்கையில் எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம்;முதன்மையானவர்களாக. விளங்கலாம்;கல்வி த் துறை உட்பட. அனைத்து துறைகளிலும் முதன்மையானவர்களாக உயரத்தை அடையலாம்;ஆனால் அந்த உயர் பதவிகளுக்கு வந்தவுடன் பொறுமையும்,பணிவும் அவசியம்.
நான் உயரத்தில் இருக்கிறேன்,இன்று நான் முதன்மையானவனாக மக்களால் அறியப்பட்டுள்ளேன் என்னை யாரும் ஆட்டவோ,அசைக்கவோ முடியாது என்று இறுமாப்புடன் விளங்கினால் அவர்கள் வாழ்க்கை,நூலறுந்த பட்டத்தின் கதையாகத்தான் முடியும்.தரையிலிருந்து எழும் பட்டமானது நூலின் அசைவால் உயர உயர பறக்கிறது.வாழ்க்கையில் பணிவு என்ற கயிறு அறுந்தவுடன்,பட்டம் அதளபாதாளத்தில் விழுந்ததைப் போல்தான்,உயர் பதவிகளில் அங்கம் வகிப்பவர்கள்,உன்னதம் குணமாக பணிவை கருவியாகக் கொண்டால் எவ்வளவு உயரத்திற்கு வேண்டுமானாலும் செல்லலாம்.இல்லாவிட்டால் மாவீரன் அலெக்சாண்டருக்கு ஏற்பட்ட கதிதான்.பொறுமையும்,பணிவும் இல்லாதநிலையில் "லைசிக்"என்ற இடத்தில் தப்பித்த வன்"வாட்டர் லூ"வில் மாட்டிக் கொண்டான்.
ஆம் நண்பர்களே!உயரம் ஒரு பொருட்டல்ல!அதை அடைந்தவுடன் பணிவு என்ற கருது கோள்தான் முக்கியம்.இதனை சிந்தனைக் கவிஞர் கவிதாசன் அவர்களின் வரிகளில் சொல்வோமானால்,"தொடும் வரைதான் சிகரம்,தொட்ட பின் நீதான் உயரம்"அடையும் வரைதான் எதுவும் உயர்ந்த சிகரம்,அடைந்த பிறகு நீ தான் அதைவிட உயரம் "என்ற வரிகள் நோக்கத் தக்கது.ஆம்!பணிவுடன் இருக்க கத்துக் கொள்வோம்.வாழ்த்தும். டாக்டர் கோவை கிருஷ்ணா.

No comments:

Post a Comment