Friday 26 April 2024

கற்களும் வைரமும் .

 கற்களும் வைரமும் . .

_*ஒரு துளி மையினால்
எழுதும் கருத்துக்கள்
ஓராயிரம் பேரைச் சிந்திக்க வைக்கும்.*_
_*தேவைக்கு மேலுள்ள பொருள் தேவையில்லாதவற்றை
வாங்கவே பயன்படும்.*_
வீழ்ந்தவன் மீண்டும் எழ ஒரு நொடி போதும், ஊக்குவிக்க உண்மையான நண்பர்கள் இருந்தால்.
வாழ்க்கைக்குப் பணம் முக்கியம்தான் ஆனால், அதைவிட முக்கியம் நல்ல நண்பர்கள் உங்களுடன் இருப்பதுதான்.
கற்களைச் சேர்ப்பதில் மும்முரமாக இருந்து வைரத்தை இழந்து விடாதீர்கள். நம்முடன் பலர் இருக்கின்றனர் என்று உண்மையான ஒருவரை இழந்து விடாதீர்கள்.
_*கிரீடம் தானே சூட்டுகிறார்கள் என்று மெத்தனமாக இருக்காதே...*_
_*உனக்கு சூட்டப்படும் கிரீடம்*_
_*முட்களால் வேயப்பட்டதாக கூட இருக்கலாம்...*_
_*எதிலும் எச்சரிக்கையாக இருந்திடு*_
_*அந்த கிரீடத்தின் முட்களே*_
_*உன் மூளையை சிதைத்து மழுங்கடித்து விடக்கூடும்.*_
இந்தப் பதிவை படித்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு வேலை இல்லாமல் இருக்கலாம்.
குடும்ப கஷ்டங்கள் இருக்கலாம்.
வேலை இழக்கும் அபாயம் இருக்கலாம். நம்மைப் பிறர் புரிந்து கொள்ளவில்லை என்ற கவலை இருக்கலாம். பிறர் உங்களுக்கு காயங்களைப் பரிசாகக் கொடுக்கலாம். பிறர் மோசமான துரோகத்தை இழைக்கலாம்.
ஆனால்
இவை அனைத்தையும் மனதில் வைத்துக் கொண்டு ஏதோ ஒரு காரணத்திற்காக வாழ்ந்து கொண்டுதான் இருப்போம்.
நிச்சயமாக இதுபோன்ற கடினமான சூழல்களை எண்ணி மனம் வருந்த நேரிடும். ஆனால் அந்த மன வருத்தத்திற்கு காரணமாக இருக்கும் காரணிகளை எப்படி விடுவது என்பது பற்றி யாரும் சிந்திப்பதில்லை.
உங்கள் வாழ்வில் எந்த பிரச்சனையாகினும் அதிலிருந்து சற்று விலகி நின்று அதைப் பற்றி நன்கு சிந்தியுங்கள். இது எதனால் எனக்கு ஏற்பட்டுள்ளது, இதை எப்படி நான் சரி செய்ய முடியும், இது மேலும் தீவிரமடையாமல் எப்படி தடுப்பது.
என்பது போன்ற சிந்தனைகள் நீங்கள் மூன்றாம் நபர் பார்வையிலிருந்து பார்த்தால் மட்டுமே தெரியும். கவலை கவலை என புலம்பிக்கொண்டே இருந்தால் தீர்வுகளை யார்தான் காண்பது. நம் வாழ்க்கை முழுவதுமே கவலைகள்தான்.
சற்று அதனைப் பற்றி சிந்தித்து, அதிலிருந்து வெளிவர முயற்சித்துப் பாருங்கள்.
*தூர நின்று உங்கள் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது
கவலைகள் கூட
கடுகுகளாகவே தெரியும்.*
_*எல்லாம் இருந்தும் இல்லாதவரை போல் வாழ்ந்து பழக ஆரம்பித்து விட்டால்... எந்த நேரத்திலும் எந்த சங்கடங்கள் நெருங்கினாலும் எதுவும் பெரிதாக மனதை பாதிக்க போவதில்லை... என்றென்றும் அமைதியே.*_

No comments:

Post a Comment