Wednesday 24 April 2024

*இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது*

 *இரு வழிப்போக்கர்கள் பேசிக்கொண்டே சென்ற போது வழியில் ஒரு நதி குறுக்கிட்டது*

.*அந்த நதியில் பாலம்எதுவும் கட்டப்படவில்லை*
*நீந்திக் கடப்பதைத் தவிர வேறு* *வழியில்லை.நதியும் குறுகலாகத்தான்* *இருந்தது. எனவே இருவரும் தைரியமாக* *நீந்திக் கடக்க முடிவு செய்தனர்*
*இருவரில் ஒருவருக்குத்தான்நீச்சல்* *நன்றாக வரும்.அடுத்தவர் அரைகுறை* *தான்.இருவரும் நீந்த ஆரம்பித்தார்கள்*
*சிறிது நேரம் கழித்துப் பார்த்தால்* *நன்றாக நீந்தக் கூடியவன் ஒரு சுழலில்* *மாட்டிக் கொண்டு திணறினான்*
*அனுபவம் அதிகம் இல்லாதவனோ* *விறுவிறுவென்று நீந்தி சென்று மறு* *கரையை அடைந்தான்*
*திரும்பிப் பார்த்தபோது தன உடன்* *வந்தவன் உயிருக்குப் போராடிக்* *கொண்டிருப்பதைக் கவனித்தான்*
*உடனே மீண்டும் நீரில் குதித்து நீந்தி,அவனைக் காப்பாற்றி கரை கொண்டு வந்து சேர்த்தான்*
*மெதுவாக தன்னிலை அடைந்த முதல்வன், தன்னைக் காப்பாற்றியதற்கு அடுத்தவனுக்கு நன்றி சொன்னான்*
*பின் ஆச்சரியத்துடன் அவனிடம் கேட்டான்*
*உனக்கு நீச்சலில் அதிக அனுபவம்* *இல்லைஎன்று சொன்னாயே பின் எப்படி* *சிரமம் எதுவும் இல்லாமல் தைரியமாக* *நதியைக் கடந்தாய்?*
*இரண்டாமவன் தனது இடுப்பிலிருந்தஒரு பையைத் தொட்டுக் காண்பித்தவாறு சொன்னான்*
'*இந்தப் பையில் நான் உழைத்து* *சம்பாதித்த தங்கக் காசுகள் உள்ளன.என்* *மனைவிக்காகவும்* *குழந்தைகளுக்காகவும் ஒரு வருடமாகப்* *போராடி உழைத்து சேர்த்த சேமிப்பு* *இது.இதன் கனம் தான் என்னை நதியை* *கடந்து வர உதவியது*
*நான் நீந்தும்போது என் மனைவியும் என்* *குழந்தைகளும் என் தோளில்* *அமர்ந்தவாறு எனக்கு வழி காட்டினார்கள்* *என்றான்*

No comments:

Post a Comment