Thursday 18 April 2024

பிடிவாதம் பெருந்தன்மை

 பிடிவாதம் பெருந்தன்மை . .

*_தேவையற்ற எண்ணங்களை_*
*_நீ சுமக்கும் வரை_*
*_உன் வாழ்வில்_*
*_நிம்மதி என்பது_*
*_இருக்கவே இருக்காது..._*
_*மனம் தூய்மையானதாக
இருந்தால், எதைக் கண்டும் பயப்படத் தேவையிருக்காது.
கவலைப்படுவதால்
மனதின் ஆற்றலும், உயிரின் சக்தியும் வீணாகிறது. எதிலும் அளவறிந்து வாழப் பழகினால் சிக்கலுக்கு இடமிருக்காது.*_
_*கவலை என்ற நோயை
மனதில் வைத்து கொண்டு குணமாக வில்லையே என்று
வருந்திப் பயனில்லை...*_
_*நம்பிக்கையான செயல்களால் மனக்கவலையை விட்டொழிப்போம்....*_
_*மகிழ்ச்சி தானாகவே வந்து சேரும்.*_
*_சந்தோஷம் என்பது
அடுத்தவர்களால் நமக்கு கிடைத்தால் மட்டும் போதாது._*
*_நம்மால் அடுத்தவர்கள் சந்தோஷமாக இருந்தாலும் அது நமக்கு சந்தோஷம்தானே._*
_*நம்மிடம் இருக்கும் குணங்களே பிறரிடமும் இருக்க வேண்டுமென்று தேடுகிறோம்.*_
_*கைரேகை போல ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும் என்பதை அறியாமல்.*_
_*வெட்ட வெட்ட முடியும் நகமும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும்.
அதற்காக நாம் தலையையோ, விரலையோ குறை கூறுவதில்லை.
அது போல உறவினர்களுக்குள் மனஸ்தாபம் வரத் தான் செய்யும். நாம் அனுசரித்துச் செல்ல வேண்டும்.*_
_*கிடைக்கும் சந்தர்ப்பத்தை எப்பவும் கை விடக் கூடாது. அதைப் பயன்படுத்தினால் மகிழ்ச்சியோ அனுபவமோ கிடைக்கும். *_
_*நீங்கள் யார் என்று மற்றவர்களுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ வேண்டாம். இந்த உலகில் நீங்கள் யார் உங்கள் கடமை என்ன என்ற எண்ணத்தோடு வாழுங்கள்.*_
_*பிடிவாதம் எப்போதும் பெருந்தன்மையை தன்னுள் அடக்கியாள முனைகிறது.*_
_*ஆனால் அதை விடுத்து பெருந்தன்மையிடம் பாடம் கற்றுக்கொள்ள முனைய வேண்டும் .*_
_*சந்தோசமாக இருந்தாலும் சோகமாக இருந்தாலும், நம்மைப் பக்குவப் பட வைப்பது நம் மனம் தான்.
நம் மனமே நமக்குச் சிறந்த ஆசிரியர். *_

No comments:

Post a Comment