Saturday 20 April 2024

வசதியும் நன்மதிப்பும் .

 வசதியும் நன்மதிப்பும் . .

_*தெய்வம் விட்ட வழி நல்வழி என்று எப்போதும் நினையுங்கள். மனதை இலகுவாக வைத்து இருங்கள். துன்பத்தைக் கண்டு அஞ்ச வேண்டாம்.*_
_*தேவையற்ற பகுதிகளை இழக்கின்ற போது தான்.*_
_*கல்லே சிற்பமாகிறது.*_
கண்ணில் தெரியும் காட்சிகளை -மனதிற்குள் நாம் எப்படி உருவகப்படுத்திக் கொள்கிறோமோ, உள்வாங்கிக் கொள்கிறோமோ, அப்படித்தான் எண்ணங்கள் உருவாகிறது.
நாளடைவில் அதுவே செயல் வடிவம் பெறுகிறது. இந்த செயலின் பலாபலன் தருவது என்னவோ அதுவே கர்மா எனப்படும்.
நல்லவன் மாதிரி இருக்கிற பொல்லாதவரை நல்லவர் என்று நினைக்கிறோம்.
பொல்லாதவர் மாதிரி இருக்கின்ற நல்லவரை பொல்லாதவர் என்று நினைக்கின்றோம்-இதன் விளைவுகளை அனுபவமாகவும் பெறுகின்றோம். எப்படி
நல்லவன் மாதிரி இருக்கிற பொல்லாதவரை_இவர் பொல்லாதவர் என்று நம்மால் இனம் காண முடியவில்லை. எதனால்.
நாம் பொல்லாதவர் மாதிரி இருந்த நல்லவரை புறக்கணித்த-கர்ம பலனால்-மந்த புத்தி என்று நமக்குள்ளே உருவாகி, சரியான புரிதல் இல்லாத தன்மையை நமக்குத் தருவதனால்தானே.
நமக்குச் சரியைச் சரியானதுதானா என்று ஆராய்வதில் இருக்கின்ற நிதானப் போக்கு நம்மிடத்தில் தவறானதை சரியானது என்று கருதுவதில் இல்லாமல் போனதே அதற்குக் காரணம்.
விவேகத்தை தருவதும் இந்த மனமே. வேகத்தை உண்டாக்குவதும் இந்த மனமே. இந்த மனதை நல்ல மாலுமியாக—நம்மால் இயக்கத் தெரியவில்லை என்றால் அதுதான் நம் வாழ்வில் கர்மா என்றாகிறது.
*_உழைப்பு சுறுசுறுப்பானது_*
*_அது வசதிகளையும்_*
*_நன்மதிப்பையும்_* *_பெற்றுத்_*
*_தருகிறது._*

No comments:

Post a Comment