Monday 15 April 2024

வாழ்க்கை.

 வாழ்க்கை.

_*ஆற்றல் நிறைந்தவனாக*_
_*இருப்பதைக் காட்டிலும்*_
_*நேர்மையானவனாக இருப்பது*_
_*மேலானது.*_
*_காரணங்கள் இல்லாமல்_*
*_தொடரும் வாதத்தில்._*
*_சொல்லப்படும் காரணங்கள்_*
*_அனைத்தும் கட்டுக்கதையே._*
_*குரு என்பவர் நமக்கு சிறகை கொடுப்பவர் அல்ல.*_
_*நம்மிடம் சிறகு இருக்கிறது என்பதை நினைவூட்டுபவரே.*_
நடக்கும் முன்னே
நல்லதே நடக்கும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.
நடந்த பின்னே, நடந்ததும் நல்லதற்கே என்று நினைத்துக்கொண்டால் வாழ்வில் பிரச்சினைகளுக்கு
இடம் இருக்காது.
நீங்கள் விதைக்கும் எண்ணங்கள் உங்களிடமே திரும்பி வந்து சேரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
நன்மை, தீமை, அறம், உண்மை, பொய், ஆக்கம், கேடு, அன்பு, சினம். எப்படிப்பட்ட எண்ணங்களை விதைக்க வேண்டும் என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும்.
உங்களிடம் இருப்பதை உயர்வானதாக நினையுங்கள். இல்லாத ஒன்றினை மலிவானதாக நினையுங்கள். துன்பம் எப்போதும் உங்களை நெருங்காது.
_*மனித வாழ்வில் மிக முக்கியமானது நம்பிக்கையாகும்.*_
_*நமது இன்றைய நிலை நமது எண்ணங்களாலேயே ஆக்கப்பட்டுள்ளது.*_
_*அதனால் யாரும் நம்மைக் காப்பாற்ற மாட்டார்கள்.*_
_*நாமே தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.*_
_*ம‌னித‌ன் ‌விழலா‌ம். அதில் தவ‌றி‌ல்லை ஆனா‌ல் ‌விழு‌ந்தே‌ ‌கிட‌க்க‌க் கூடாது.*_
_*ஆற்றின் ஆழத்தை அறிய முற்படும் போது இரண்டு காலையும் கொண்டு முயற்சிக்காதீர்கள்.*_
_*ஏனென்றால் முயற்சி தோல்வியடைந்தாலும் மீண்டு வரக் கூடிய தூரத்தில் இருந்தே முயற்சி செய்யுங்கள்.*_
_*விழுந்து விட்டேன் என்று கண்ணீர் சிந்துவதை விட எழுந்து விட்டேன் என்று புன்னகை செய்யுங்கள்.*_
_*இந்த உலகில் உங்களை வெல்ல யாராலும்முடியாது.*_
_*ஆகையால் தன்னம்பிக்கை என்ற ஒன்று போதும் . எதையும் வென்று விடலாம். முயற்சி செய்யுங்கள், வெற்றி நிச்சயம்.*_
_*இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்க அருள் தருவாய் இறைவா. *_
_*கடமைக்காகச் சிலர்,
தேவைக்காகச் சிலர்,
காரியத்திற்காகச் சிலர்,
பெருமைக்காகச் சிலர்,
புகழுக்காகச் சிலர்,
உண்மையாகச் சிலர்,
அக்கரையோடு சிலர்.
இவர்கள் அனைவரையும் சமாளித்து வாழ்வதே வாழ்க்கை.*_

No comments:

Post a Comment