Wednesday 3 April 2024

வெற்றியின் ஒளி .

 வெற்றியின் ஒளி .

_*தன் போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நதியில் இணைவதாய் வந்து சேரும் ஓடைகள் சில*_
_*அவற்றில் பல*_
_*தெளிந்த நீருடன் சேர்ந்தாலும் சில நதி நீரை கலங்க செய்து அகல்கின்றன*_
_*நதி தொடர்ந்து ஓடிக்கொண்டு தான் உள்ளது தன்னோடு சேர்ந்ததையும் சேர்த்துக்கொண்டு*_
_*எல்லாம் வெறுத்த பின்பும் ஏதோ ஒன்று ஆறுதல் தருகிறது*_
_*எல்லாம் கடந்த பின்பும் ஏதோ ஒன்று கனவாக வருகிறது*_
_*எல்லாம் முடிந்த பின்பும் ஏதோ தொடங்குகிறது*_
_*எல்லாம் மறந்த பின்பும் ஏதோ ஒன்று நினைவுகளாய் இருக்கிறது*_
_*இந்த ஏதோ என்பது தான் நம்மை ஒவ்வொரு நாளும் கடந்து போக உதவுகிறது*_
_*மனதின்*_
_*விருப்பத்திற்கேற்ப*_
_*சூழ்நிலை அமைவதில்லை;*_
_*இருக்கிற சூழ்நிலையை*_
_*சாதகமாக்கிக் கொள்பவனே*_
_*அறிவாளி!*_
உங்களைச் சுற்றியுள்ளவர்களை
நீங்கள் மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால் முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.
எல்லாச் சிரிப்பும்
சிரிப்பதற்காக மட்டுமே அல்ல சிலவற்றை மறைப்பதற்காகவும் தான். ஒரு ஸ்மைல் (சிரிப்பு) பல கிலோமீட்டர்ருக்கு சோகத்தை கடத்தி விடும்.
சிரித்துக் கொண்டே கடந்து விடுங்கள் உங்கள் கஷ்டங்களை மட்டும் அல்ல உங்களைக் கலங்க வைத்த அவர்களையும் கடந்து விடுங்கள்.
சந்தோஷம் என்பது
தேடிச் செல்வது அல்ல நம்மிடம் இருப்பதை வைத்து உருவாக்குவது.
உங்களால் முடியும் என்ற மந்திரச் சொல்லை உங்கள் மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். முடியாது என்ற சொல்லை நீங்களே மறந்து விடுவீர்கள்.
வெற்றியின் ஒளி
உங்கள் கண் முன் தோன்றும், உங்களுடைய அனைத்து செயல்களும் வெற்றியில் முடியும்.
கடந்து போனதைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
அதில் நன்மை இருந்திருந்தால் நீடித்திருக்கும்.
கடினம் என நினைத்தால்
கரைசேர முடியாது.
கடந்து பார்ப்போம் என நினையுங்கள். எதையும் உங்களால் அடைய முடியும்.

No comments:

Post a Comment