Monday 22 April 2024

மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் திருக்கல்யாண மாப்பிள்ளை விருந்து தொடங்கியது.

 மதுரை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் திருக்கல்யாண மாப்பிள்ளை விருந்து தொடங்கியது.

மாநகர் மதுரையில் சித்திரைத் திருவிழா திருக்கல்யாணம் நாளை காலை நடைபெற உள்ளது.
அதற்கான முதல் நாள் மாப்பிள்ளை விருந்து பழமுதிர்ச் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் இன்று மாலை சேதுபதி மேல் நிலைப்பள்ளியில் சிறப்பு பூஜைகள் செய்து ஸ்தாபகர் தெய்வத்திரு செவந்திராஜன் மற்றும் கடந்த இருபத்து மூன்று ஆண்டுகள் அயராது இதனை முன்னெடுத்துச் சென்ற சாமுண்டி பி என். விவேகானந்தன் அவர்கள் ஆசியுடன் 26 ஆம் ஆண்டு சேவை தொடங்கியது.
சேதுபதி பள்ளிச் செயலாளர் வழக்கறிஞர் பார்த்தசாரதி, எம் ஏ வி எம் சபைத் தலைவர் விகேபி என்ற பாஸ்கரன், மனிதத்தேனீ ர. சொக்கலிங்கம், காவல்துறை டி ஐ ஜி ரம்யா பாரதி மற்றும் உயர் அதிகாரிகள், செல்லமுத்து அறக்கட்டளை இயக்குனர் ராஜகுமாரி ராமசுப்பிரமணியன் (CRS) , உஷா பார்த்தசாரதி, தாம்பிராஸ் இல. அமுதன், எஸ் ஆர் எஸ்.சங்கரன்,
பள்ளி முதல்வர், வழக்கறிஞர் அருண்குமார், இல. புவனேஷ், ஜுவல்லரி பாலசுப்பிரமணியன், மேனாள் டிஎஸ்பி. கணேசன், கலைமகள் காசி விஸ்வநாதன், ராஜாபார்லி சக்கரவர்த்தி உள்ளிட்ட ஏராளமான பெருமக்கள் பங்கேற்று தொடங்கி வைத்தனர்.
முப்பதாயிரம் பேருக்கு இன்று இரவு விருந்தில் கேசரி, பஜ்ஜி, வடை, பொங்கல் விருந்தினை அதன் தலைவர் பி. தண்டீஸ்வரன், செயலாளர் எஸ் ஆர் வெங்கடேசன், துணைத் தலைவர் வழக்கறிஞர் கே. கார்த்திகேயன் என்ற ராஜா, பொருளாளர் பிஎன். வி.ஹரி மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள் மிகச் சிறப்பாகச் செய்திருந்தனர்.
சேவை மனப்பான்மை கொண்ட பல நூறு அன்பர்கள் கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் வெட்டுவது, சமைய‌ல் பணியாற்றுவது, பரிமாறும் பணி, சுத்தம் செய்யும் பணி, கூட்டத்தை மிக நேர்த்தியாக ஒழுங்கு படுத்தும் பணி என ஆலவாய் அண்ணல் அங்கயற்கண்ணி க்கு தொண்டாகச் செய்து வருவது வணங்குதற்குரியது.
நாளை காலை முதல் மதியம் வரை திருக்கல்யாண விருந்து ஒரு லட்சம் பேருக்கு தயாராகி வருகிறது.
இது மாநகர் மதுரையில் நடைபெறும் மகத்தான திருப்பணி.
ஒப்பீடு இல்லாத அறப்பணி வாழியவே.













No comments:

Post a Comment